சினிமா

’என்ன மன்னிச்சிடுங்க’.. நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா: என்ன காரணம்?

நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

’என்ன மன்னிச்சிடுங்க’..  நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா: என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இவர் இயக்குநராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததை விட ஒரு நடிகராகப் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் .

நடிகர் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளிவந்த வாலி, குஷி படங்கள் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அப்போதில் இருந்தே சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. நண்பன், இறைவி, மெர்சல் படங்களில் இவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது. 2021ம் ஆண்டு வெளிவந்த மாநாடு படம் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியை எப்படிக் கொடுததோ, அதேபோல் எஸ்.ஜே. சூரியாவின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரது நடிப்பை ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகர்களே புகழ்ந்து பேசினர்.

’என்ன மன்னிச்சிடுங்க’..  நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா: என்ன காரணம்?

அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமாரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைப் பாராட்டி ஒரு ட்வீட் செய்துள்ளார். ஆனால் இந்த ட்வீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பார்த்துள்ளார்.

இதையடுத்து, "நான் எப்படிப் பார்க்காமல் விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி" என நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த ட்வீட் சினிமா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories