சினிமா

“எனக்கு 60.. உனக்கு..” - 60 வயதில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து !

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, தனது 60 வயதில் 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.

“எனக்கு 60.. உனக்கு..” - 60 வயதில்
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியை சேர்ந்தவர் தான் பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi). 1991-ம் ஆண்டு Kaal Sandhya என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்கவே, இந்தியில் தொடர்ந்து நடித்து வந்தார். இவரது 3-வது படமான Drohkaal என்ற படத்துக்கு தேசிய விருதும் பெற்றார்.

“எனக்கு 60.. உனக்கு..” - 60 வயதில்
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து !

தொடர்ந்து இந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர் தெலுங்கு, கன்னடம், பெங்காலி என நடிக்க தொடங்கிவிட்டார். தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு விக்ரம், லைலா நடிப்பில் வெளியான 'தில்' படத்தில் நடித்தார். வில்லனாக நடித்த இவர் தனது முதல் தமிழ் படத்திலேயே பிரபலமானார். அதன்பிறகு அர்ஜுனின் ஏழுமலை, விஜயின் பகவதி, தமிழன், கில்லி, அழகிய தமிழ் மகன், சிம்புவின் தம், சூர்யாவின் ஆறு உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்து பிரபலமானார்.

“எனக்கு 60.. உனக்கு..” - 60 வயதில்
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து !

இதில் விஜய்க்கு வில்லனாக நடித்து, அப்பாவாக, மாமனாராக நடித்த பகவதி, தமிழன், கில்லி ஆகிய படங்கள் இன்றளவும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள இவர் இந்திய அளவில் பிரபல நடிகராக இருக்கிறார்.

“எனக்கு 60.. உனக்கு..” - 60 வயதில்
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து !

11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ராஜோஷி பருவா (Rajoshi Barua) என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். ராஜோஷி பருவா, ஒரு நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞர் ஆவார். ஆனால் திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

“எனக்கு 60.. உனக்கு..” - 60 வயதில்
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து !

இந்த நிலையில் தற்போது 60 வயதாகும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, அஸ்ஸாமை சேர்ந்த ரூபாலி பருவாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 50 வயதான ரூபாலி பருவா அஸ்ஸாமின் கவுகாத்தியைச் சேர்ந்தவர் ஆவார். தொழிலதிபரான இவர், கொல்கத்தாவில் உள்ள கைத்தறி பேஷன் கடையில் NAMEG உடன் தொடர்புடையவர் ஆவார்.

“எனக்கு 60.. உனக்கு..” - 60 வயதில்
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து !

ஆஷிஷ் வித்யார்த்தி - ரூபாலி பருவாவின் திருமணம் எளிய முறையில் நேற்று முன்னிலையில் பதிவுத் திருமணமாக நடந்தது. இந்த தம்பதிக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories