சினிமா

ஸ்னூக்கர் பந்துகளை வைத்து கோலி விளையாட்டு.. நடிகர் யோகி பாபு செய்த குசும்பு வீடியோ வைரல் !

நடிகர் யோகி பாபு ஸ்னூக்கர் பந்துகளை வைத்து கோலி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்னூக்கர் பந்துகளை வைத்து கோலி விளையாட்டு.. நடிகர் யோகி பாபு செய்த குசும்பு வீடியோ வைரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2009-ம் ஆண்டு தமிழில் வெளியான 'யோகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபு. அது இவருக்கு கைகொடுக்க, திரை வட்டாரத்தில் யோகி பாபு என்று அழைக்கப்பட்டு வருகிற. அதன்பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 'யாமிருக்க பயமே' படத்தில் 'பன்னி மூஞ்சுவாயனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

ஸ்னூக்கர் பந்துகளை வைத்து கோலி விளையாட்டு.. நடிகர் யோகி பாபு செய்த குசும்பு வீடியோ வைரல் !

அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்த இவர், முதல் முறையாக 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நயன்தாரவுக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அது மாஸ் ஹிட் கொடுக்க, அதன்பின்னர் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மண்டேலா' படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.

ஸ்னூக்கர் பந்துகளை வைத்து கோலி விளையாட்டு.. நடிகர் யோகி பாபு செய்த குசும்பு வீடியோ வைரல் !

நடிப்பில் முழுக்க முழுக்க பிசியாக இருக்கும் இவர், தற்போது அயலான், சலூன், பூமர் அங்கிள், சதுரங்க வேட்டை 2 சுமார் 20 படங்கள் தனது கைவசம் வைத்துள்ளார். சினிமாவை தாண்டி விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட யோகி பாபு, அதிக நேரங்களில் கிரிக்கெட், கால் பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்.

ஸ்னூக்கர் பந்துகளை வைத்து கோலி விளையாட்டு.. நடிகர் யோகி பாபு செய்த குசும்பு வீடியோ வைரல் !

கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதால் நடிகர் விஜய், புதிதாக கிரிக்கெட் பேட்டை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் கிரிக்கெட் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி, தான் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டை கையெழுத்திட்டு அவருக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஸ்னூக்கர் பந்துகளை வைத்து கோலி விளையாட்டு.. நடிகர் யோகி பாபு செய்த குசும்பு வீடியோ வைரல் !

இந்த நிலையில் தற்போது யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்னூக்கர் விளையாட்டை விளையாடுவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்னூக்கர் விளையாட்டு என்பது பெரிய மேஜையில் இருக்கும் குட்டி குட்டி பந்துகளை, ஸ்னூக்கர் கம்பை வைத்து அதில் இருக்கும் ஓட்டைக்குள் சரியாக போட வேண்டும். ஆனால் யோகி பாபுவோ அந்த ஸ்னூக்கர் பந்துகளை வைத்து சிறிய வயதில் கோலிக்காய் விளையாடுவது போல், கோலி விளையாடியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அனைவருக்குள்ளும் வேடிக்கையான சில நிகழ்வுகள் இருக்கும்.

banner

Related Stories

Related Stories