சினிமா

“யுத்தபூமியில் சந்திக்க காத்திருக்கிறேன்..” - ஜூனியர் NTR-க்கு அழைப்பு விடுத்த பிரபல பாலிவுட் நடிகர் !

தெலுங்கு பிரபல நடிகர் ஜூனியர் NTR தனது 40-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

“யுத்தபூமியில் சந்திக்க காத்திருக்கிறேன்..” - ஜூனியர் NTR-க்கு அழைப்பு விடுத்த பிரபல பாலிவுட் நடிகர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் நடிகர் ஜூனியர் NTR. 1991-ல் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவருக்கு தெலுங்கு திரையுலகில் ரசிகர்கள் ஏராளம். அதனாலே இவர் என்ன படம் நடித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிடும்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், ஒரு பின்னணி பாடகராகவும் தனது படத்தின் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான RRR படத்தின் மூலம் உலக அளவில் அறியப்பட்டுள்ளார். பான் இந்தியா படமாக உருவான RRR படம், இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்த படமாக திகழ்ந்தது.

“யுத்தபூமியில் சந்திக்க காத்திருக்கிறேன்..” - ஜூனியர் NTR-க்கு அழைப்பு விடுத்த பிரபல பாலிவுட் நடிகர் !
Silverscreen Inc.

இதனால் இவர் இந்திய திரை பிரபலமாக திகழ்கிறார். இந்த சூழலில் இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ஹிருத்திக் ரோஷனே இதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

“யுத்தபூமியில் சந்திக்க காத்திருக்கிறேன்..” - ஜூனியர் NTR-க்கு அழைப்பு விடுத்த பிரபல பாலிவுட் நடிகர் !

இன்று ஜூனியர் என்.டி.ஆர்., தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள், மற்றும் திரை பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ntr 30 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு 'தேவரா' என்ற டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் NTR-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“யுத்தபூமியில் சந்திக்க காத்திருக்கிறேன்..” - ஜூனியர் NTR-க்கு அழைப்பு விடுத்த பிரபல பாலிவுட் நடிகர் !

இதுகுறித்து ஹிருத்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிறந்தநாள் வாழ்த்துகள் ஜூனியர் NTR. உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகவும், செயல் நிறைந்த ஆண்டாகவும் அமைய வாழ்த்துகள். உங்களுக்காக யுத்தபூமியில் காத்திருக்கிறேன் நண்பரே. உங்கள் நாட்கள் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கட்டும். நாம் சந்திக்கும் வரை." என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“யுத்தபூமியில் சந்திக்க காத்திருக்கிறேன்..” - ஜூனியர் NTR-க்கு அழைப்பு விடுத்த பிரபல பாலிவுட் நடிகர் !

இதன்மூலம் ஜூனியர் NTR 'வார் 2' படத்தில் நடிப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. மேலும் அதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'வார்' படத்தின் இரண்டாம் பாகத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories