சினிமா

‘ஸ்ரீவள்ளி’ கதாபாத்திரம் குறித்த சர்ச்சை.. விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா பதில் !

ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் குறித்த சர்ச்சைக்கு நீங்கள் சொல்ல வருவதை தான் புரிந்துகொண்டதாக நடிகை ராஷ்மிகா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பதில் அளித்துள்ளார்.

‘ஸ்ரீவள்ளி’ கதாபாத்திரம் குறித்த சர்ச்சை.. விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் தான் 'புஷ்பா - தி ரைஸ்'. கடந்த 2021-ல் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா 'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் குவித்தது. இதற்கு பலரும் ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.

‘ஸ்ரீவள்ளி’ கதாபாத்திரம் குறித்த சர்ச்சை.. விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா பதில் !

இந்த நிலையில், இந்த கதாபாத்திரம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அண்மையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. விஜய் தேவரகொண்டாவுடன் நான் நடித்த 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' எனும் தெலுங்கு திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

ஆனால் நான் ஒரு நல்ல படம் பண்ண வேண்டும். புஷ்பா படத்தில் 'ஸ்ரீவள்ளி' கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன். அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மிகவும் அருமையாக நடித்திருப்பார்; இருப்பினும் எனக்கு கிடைத்திருந்தால் நான் மிகவும் அருமையாக நடித்திருப்பேன்" என்றார். இவரது இந்த பேட்டி வைரலாகி ராஷ்மிகா ரசிகர்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பியது.

‘ஸ்ரீவள்ளி’ கதாபாத்திரம் குறித்த சர்ச்சை.. விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா பதில் !

இந்த சூழலில் நேற்றைய முன்தினம், துரதிர்ஷ்டவசமாக தன்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை தான் ஒரு போதும் குறை கூறவில்லை என்றும், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்திருந்தார்.

‘ஸ்ரீவள்ளி’ கதாபாத்திரம் குறித்த சர்ச்சை.. விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா பதில் !

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கத்தில் நடிகை ராஷ்மிகா கமெண்ட் செய்துள்ளார். இதுகுறித்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள கமெண்டில், "வணக்கம் அன்பே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாக புரிந்துகொண்டேன்.

இப்போதுதான் இதை பார்த்தேன். எனவே நீங்கள் விளக்கம் கூறுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றே நினைக்கிறேன். உங்கள் மீது நான் அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அது உங்களுக்கும் தெரியும். மீண்டும் உங்கள் ஃபர்ஹானா படத்துக்கு என்னுடைய ஆல் தி பெஸ்ட்" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories