சினிமா

“தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க” -புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்பு குறித்த பேச்சுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

தான் ராஷ்மிகாவை பற்றி கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

“தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க” -புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்பு குறித்த பேச்சுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் தான் 'புஷ்பா - தி ரைஸ்'. கடந்த 2021-ல் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா 'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் குவித்தது. இதற்கு பலரும் ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.

“தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க” -புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்பு குறித்த பேச்சுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

இந்த நிலையில், இந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், ராஷ்மிகாவை விட மேலும் நன்றாக நடித்திருப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் 'ஃபர்ஹானா'. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தற்போது திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் அண்மையில் இவர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனக்கு நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக தெரிவித்த இவர், விஜய் தேவரகொண்டாவுடன் தான் நடித்த 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' எனும் தெலுங்கு திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

“தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க” -புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்பு குறித்த பேச்சுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன் என்றார். மேலும் அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மிகவும் அருமையாக நடித்திருப்பார்; இருப்பினும் எனக்கு கிடைத்திருந்தால் ராஷ்மிகாவைவிட மிகவும் அருமையாக நடித்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தான் ராஷ்மிகாவை பற்றி கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

“தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க” -புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்பு குறித்த பேச்சுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்என பதிலளித்தேன்.

“தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க” -புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்பு குறித்த பேச்சுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ரஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories