சினிமா

தொடரும் சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் மூழ்கிய கன்னட திரையுலகம் !

கன்னட சின்னத்திரை நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் மூழ்கிய கன்னட திரையுலகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கன்னடத்தில் பிரபல சின்னத்திரை நடிகராக இருப்பவர் சம்பத் ஜே ராம். இவர் கன்னட சின்னத்திரையில் நடித்து பிரபலமானார். பல தொடர்களில் நடித்து வந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்தாலும், சின்னத்திரை மட்டுமே இவருக்கு பெரிய அளவு பெயர் கொடுத்தது.

தொடரும் சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் மூழ்கிய கன்னட திரையுலகம் !

இவர் நடிப்பில் அண்மையில் 'ஸ்ரீ பாலாஜி ஸ்டூடியோ' என்ற கன்னட படம் வெளியானது. அந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் தற்போது சம்பத் நடித்து வருகிறார். அதோடு இவர் நடித்த அக்னி சாக்ஷி என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடரும் சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் மூழ்கிய கன்னட திரையுலகம் !

இந்த சூழலில் நடித்து கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டு இவர் திருமணமும் செய்துகொண்டார். தற்போது 35 வயதாகும் இவர் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று (நேற்றைய முன்தினம்) நீலமங்கலா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் மூழ்கிய கன்னட திரையுலகம் !

தொடர்ந்து இவரது இறப்புக்கு பிரபலங்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இதே போல் திரைபிரபலங்கள் வாய்ப்புகள் இன்றியும், காதல் தோல்வியினாலும் வேதனைகள் அடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இது போன்ற இறப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்தே காணப்படுகிறது.

தொடரும் சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் மூழ்கிய கன்னட திரையுலகம் !

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !

banner

Related Stories

Related Stories