சினிமா

பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேள்பாரி கதையை படமாக எடுப்பீர்களா ?- இயக்குனர் மணிரத்னத்தின் பதில் என்ன ?

வேள்பாரி கதையை படமாக எடுப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குநர் மணிரத்னம் அளித்த பதில் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேள்பாரி கதையை படமாக எடுப்பீர்களா ?- இயக்குனர் மணிரத்னத்தின் பதில் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம்தான் 'பொன்னியின் செல்வன் 1'. உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிய இந்த படம் இந்தியாவில் பான் இந்தியா படமாக வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், பார்த்திபன் என்று திரைபட்டாளமே நடித்துள்ளது.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேள்பாரி கதையை படமாக எடுப்பீர்களா ?- இயக்குனர் மணிரத்னத்தின் பதில் என்ன ?

பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் இருந்து உருவான இந்த கதையை, தமிழில் எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பல திரை கலைஞர்கள் படமாக எடுக்க முயன்றனர். இந்த நிலையில் நீண்ட விடா முயற்சிக்கு பிறகு மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்கில் வெற்றிநடைபோட்டது.

சுமார் 500 கோடிக்கும் மேலாக வசூல் சாதனையை படைத்து கடந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக திகழ்ந்தது. முதல் பாகத்துக்கே படக்குழு ப்ரோமோஷனை வித்தியாசமாக செய்தது. எனவே இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேள்பாரி கதையை படமாக எடுப்பீர்களா ?- இயக்குனர் மணிரத்னத்தின் பதில் என்ன ?

படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்க, இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் சென்னையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணிரத்னம், விக்ரம், ஜெயரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி சோபிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்று தான் வேள்பாரி நாவல் பற்றிய கேள்வி.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேள்பாரி கதையை படமாக எடுப்பீர்களா ?- இயக்குனர் மணிரத்னத்தின் பதில் என்ன ?

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மணிரத்னம், "சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட சிறந்த படைப்புகளை படமாக எடுக்கலாம் என்பதற்கு பொன்னியின் செல்வன் 1 வெற்றி ஒரு துவக்கமாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார். தொடர்ந்து வேள்பாரியை எடுக்க விருப்பம் உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "வேள்பாரி கதையை வேறு ஒருவர் எடுக்க போகிறார். அது வந்தவுடன் நீங்களும் பாருங்கள். நானும் உங்களுடன் பார்க்கிறேன்" என்றார்.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேள்பாரி கதையை படமாக எடுப்பீர்களா ?- இயக்குனர் மணிரத்னத்தின் பதில் என்ன ?

'வேள்பாரி' என்பது பிரபல எழுத்தாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் எழுதிய நாவல் ஆகும். அன்றைய காலத்தில் சேர, சோழர், பாண்டியர் இங்கு ஆண்டபோது, அவர்களுக்கு கீழ் இல்லாமல் சில சிறு, குறு நில மன்னர்கள் இருந்தனர். அதில் பெரும் புகழ் படைத்தவர்தான் பாரி என்ற மன்னர்.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேளிர் குலத்தை சேர்ந்த இந்த பாரி மன்னர் பறம்பு மலையை ஆட்சி புரிந்து வந்தார். அப்போது வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு என்ற வகை விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைத்து அதற்கான வேலைகளை செய்கிறார்.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேள்பாரி கதையை படமாக எடுப்பீர்களா ?- இயக்குனர் மணிரத்னத்தின் பதில் என்ன ?

அவ்வாறு செய்யும்போது குலசேகர பாண்டியனின் துறைமுகம் தீக்கிரையாகிறது. எனவே சேர, சோழ மன்னர்களையும் உடன் சேர்த்து பறம்பு மலையை முற்றுகையிட்டு, போர் தொடுக்க முயல்கின்றனர். இந்த பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் நடத்தும் இந்தப் போரில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இறுதி அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது.பொன்னியின் செல்வன் போல், இதுவும் மிப்பெரிய வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories