சினிமா

விலகிய விஜய் சேதுபதி... இணைந்த ஆஸ்கர் பட நாயகன்- முத்தையா முரளிதரனின் 800 படத்தின் First Look வெளியீடு!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றின் First Look போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விலகிய விஜய் சேதுபதி...  இணைந்த ஆஸ்கர் பட நாயகன்- முத்தையா முரளிதரனின் 800 படத்தின் First Look வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து திரைப்படங்கள் எடுக்கப்படுகிறது. முன்னதாக கிரிக்கெட் வீரர் தோனி, பிரவின் தாம்பே, பெண் வீரங்கனை மித்தாலி ராஜ், குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட பலரது வாழ்க்கையும் படமாக்கப்பட்டுள்ளது.

விலகிய விஜய் சேதுபதி...  இணைந்த ஆஸ்கர் பட நாயகன்- முத்தையா முரளிதரனின் 800 படத்தின் First Look வெளியீடு!

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி படம் எடுக்கப்போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியானது. அதோடு இவர் டெஸ்ட் விளையாட்டில் மட்டுமே 800 பேரை வீழ்த்தி சாதனை படைத்ததால் இந்த படத்துக்கு 800 என்ற தலைப்பும் வெளியானது.

விலகிய விஜய் சேதுபதி...  இணைந்த ஆஸ்கர் பட நாயகன்- முத்தையா முரளிதரனின் 800 படத்தின் First Look வெளியீடு!

ஆனால் முன்னதாக முத்தையா சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததால், இலங்கை தமிழர்கள் உட்பட இங்கிருக்கும் தமிழர்கள் என அனைவரும் இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரிய பூதாகரமாக விவாதிக்கப்படும் கன்டென்டாக மாறிய நிலையில், விஜய் சேதுபதி இதில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

விலகிய விஜய் சேதுபதி...  இணைந்த ஆஸ்கர் பட நாயகன்- முத்தையா முரளிதரனின் 800 படத்தின் First Look வெளியீடு!

இதையடுத்து இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினாலும், முத்தையாவின் வரலாறு படமாக்கப்படும் என்று படக்குழு திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், இந்த படம் தொடர்பான எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது. மேலும் இதில் விஜய் சேதுபதிக்கு பதில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்தும் படக்குழு ஆலோசித்து வந்தது. நீண்ட மாதங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் முதல் பார்வை (First Look) வெளியாகியுள்ளது.

விலகிய விஜய் சேதுபதி...  இணைந்த ஆஸ்கர் பட நாயகன்- முத்தையா முரளிதரனின் 800 படத்தின் First Look வெளியீடு!

முத்தையா முரளிதரன் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அவரது பிறந்தநாளை முன்னிட்டு இதன் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

விலகிய விஜய் சேதுபதி...  இணைந்த ஆஸ்கர் பட நாயகன்- முத்தையா முரளிதரனின் 800 படத்தின் First Look வெளியீடு!

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் ஆஸ்கர் வென்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' (Slumdog Millionaire) படத்தில் நடித்திருந்த மதுர் மிட்டல் நடிக்கிறார். Slumdog Millionaire படத்தில் மாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்டார்.

இவருடன் நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, வடிவுக்கரசி உள்ளிட்ட பல திரைபிரபலன்களும் நடிக்கின்ற்னர். இது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் இந்த போஸ்ட்டர் இணையத்தில் வைரலாகி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories