சினிமா

அப்பாடா.. ஒரு வழியா தெரிஞ்சுட்டு.. ‘கங்குவா’ என்றால் இதுதான் அர்த்தமா? - குழப்பத்துக்கு விடை கொடுத்த சிவா

சூர்யாவின் அடுத்த படமான 'கங்குவா' என்ற டைட்டிலுக்கு அர்த்தம் என்ன என்று ரசிகர்கள் தேடி அழைந்த நிலையில், தற்போது அதன் அர்த்தத்தை அந்த படத்தின் இயக்குநர் சிவா கூறியுள்ளார்.

அப்பாடா.. ஒரு வழியா தெரிஞ்சுட்டு.. ‘கங்குவா’ என்றால் இதுதான் அர்த்தமா? - குழப்பத்துக்கு விடை கொடுத்த சிவா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக பெண்கள் ரசிகர்கள் இவருக்கு ஏராளமானோர் உள்ளனர். இவரது நடிப்பில் தயாரிப்பில் கடந்த 2021-ல் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரிய அளவு வெற்றி பெற்றது.

இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மாஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்தார். 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரம் மூலம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்'-ல் இணைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்த இவரது அடுத்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், 'சூர்யா 42' போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

அப்பாடா.. ஒரு வழியா தெரிஞ்சுட்டு.. ‘கங்குவா’ என்றால் இதுதான் அர்த்தமா? - குழப்பத்துக்கு விடை கொடுத்த சிவா

அப்போதிலிருந்தே 'சூர்யா 42' ஒரு வரலாற்று படம் என்றும், அது பொன்னியின் செல்வன் போல் வரலாற்றை தழுவி எடுக்கப்படவுள்ளது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். பான் இந்தியா படமாக எடுக்கப்படும் இந்த படமானது சுமார் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 3D-ல் எடுக்கப்படும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்பாடா.. ஒரு வழியா தெரிஞ்சுட்டு.. ‘கங்குவா’ என்றால் இதுதான் அர்த்தமா? - குழப்பத்துக்கு விடை கொடுத்த சிவா

இதன் படப்பிடிப்பு தொடங்கியதாக சூர்யா கடந்த ஆண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து பெரிதாக இந்த படத்தின் எந்த அப்டேடும் வெளியாகாத நிலையில், தற்போது இதன் அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி கடந்த மாதம் 14-ம் தேதி இதன் டைட்டில் கிலிம்ஸ் வெளியானது.

அப்பாடா.. ஒரு வழியா தெரிஞ்சுட்டு.. ‘கங்குவா’ என்றால் இதுதான் அர்த்தமா? - குழப்பத்துக்கு விடை கொடுத்த சிவா

அதன்படி அந்த போஸ்டரில் ‘Mighty Valiant Saga’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு அர்த்தம் என்னவென்றால் ”வலிமை மிக்க வீரம் மிக்க சரித்திரம்” என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இது ஒரு சரித்திர கதையாக இருக்கலாம் என்று எண்ணப்பட்ட நிலையில், கடந்த 16-ம் தேதி இந்த படத்தின் 'கங்குவா' டைட்டில் வெளியானது. மேலும் இந்த படம் அடுத்தஆண்டு திரையரங்கில் வெளியாகவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அப்பாடா.. ஒரு வழியா தெரிஞ்சுட்டு.. ‘கங்குவா’ என்றால் இதுதான் அர்த்தமா? - குழப்பத்துக்கு விடை கொடுத்த சிவா

இந்த சூழலில் 'கங்குவா' என்றால் அர்த்தம் என்ன என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் அலசி ஆராய்ந்து பார்த்தனர். இருப்பினும் இதுகுறித்த பெரிய தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை. இந்த நிலையில் இந்த டைட்டிலுக்கான அர்த்தம் குறித்து இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

அப்பாடா.. ஒரு வழியா தெரிஞ்சுட்டு.. ‘கங்குவா’ என்றால் இதுதான் அர்த்தமா? - குழப்பத்துக்கு விடை கொடுத்த சிவா

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “உண்மையில் 'கங்குவன்' என்பது மொழியில் ஒரு பெயர். படத்தின் போஸ்டரில் 'கங்குவா' என்ற பெயருக்கு மேலே இருக்கும் அந்த எழுத்துகளானது வட்டெழுத்துகள் ஆகும். இது பழங்காலத் தமிழ் மொழி ஆகும். இந்த மொழி 3 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. 'கங்கு' என்றால் தமிழில் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்.

இந்த படமானது 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்தி வாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும். இதில் பீரியாடிக் சம்பந்தப்பட்ட காலமும், சமகாலம் என இரண்டும் கலந்து இருக்கும். நாங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்க விரும்புகிறோம். ஒரு கம்பீரமான மற்றும் மறக்கமுடியாத திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறோம்.” என்றார்.

banner

Related Stories

Related Stories