சினிமா

LEO.. LEO.. தீம் பாடலை பாடி அசத்திய சிறுவன்.. மெய்மறந்து பார்த்த அனிருத்.. ரசிகர்கள் கொண்டாட்டம் ! Video

விஜயின் லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் தீம் பாடலை அனிருத் முன்னிலையில் சிறுவன் ஒருவர் பாடியுள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEO.. LEO.. தீம் பாடலை பாடி அசத்திய சிறுவன்.. மெய்மறந்து பார்த்த அனிருத்.. ரசிகர்கள் கொண்டாட்டம் ! Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், டான்சர் சாண்டி என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

அனிருத் இசையமையக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கிறது. லோகேஷுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்த விஜய், இந்த முறை இந்த படத்தின் மூலம் LCU-வில் இணைகிறார்.

LEO.. LEO.. தீம் பாடலை பாடி அசத்திய சிறுவன்.. மெய்மறந்து பார்த்த அனிருத்.. ரசிகர்கள் கொண்டாட்டம் ! Video

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் பெரிய திரைபட்டாளமே நடித்து வருகிறது. இதில் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அங்கு அதிக மைனஸ் டிகிரி குளிரிலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும்.

LEO.. LEO.. தீம் பாடலை பாடி அசத்திய சிறுவன்.. மெய்மறந்து பார்த்த அனிருத்.. ரசிகர்கள் கொண்டாட்டம் ! Video

முன்னதாக இந்த படத்தின் பெயர் வெளியீட்டுக்கு முன்னே 'தளபதி 67' என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 'லியோ' என்ற பட டைட்டில் வெளியீட்டின்போது, இந்த படத்தின் தீம் பாடலோடு வெளியானது. அந்த தீம் பாடலில் Bloody Sweet என்ற வசனமும் இடம்பெற்றது. இந்த தீம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

LEO.. LEO.. தீம் பாடலை பாடி அசத்திய சிறுவன்.. மெய்மறந்து பார்த்த அனிருத்.. ரசிகர்கள் கொண்டாட்டம் ! Video

பலரும் இந்த தீம் பாடலை தங்கள் காலர் டியூனாகவும், ரிங் டோனாகவும் வைத்துள்ளனர். I'm fireproof என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் மற்றும் இந்தி பாடகரான சித்தார்த் பஸ்ருர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் மூலம் கோலிவுட்டில் சித்தார்த் அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில் இந்த பாடலை சிறுவன் ஒருவர் அனிருத் முன்னிலையில் முழுவதுமாக பாடி அசத்தியுள்ளார். முழுக்க முழுக்க ஆங்கில வரிகளில் இடப்பெற்றிருக்கும் இந்த பாடலை சிறுவன் ராகத்தோடு பாடினார். அதனை அனிருத்தும் மெய் மறந்து கேட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சுமார் 45 நொடி இருக்கும் இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

banner

Related Stories

Related Stories