சினிமா

OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?

OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டதால் நாம் அன்றாட வாழ்வின் தேவையாக அமைகிறது. முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டுக்களை முழுமையாக டிவியில், அல்லது ரேடியோ, அல்லது பேப்பர் மூலம் நம்மால் அறிய முடியும். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் நம்மால் எது எங்கே எப்படி நடக்கிறது என்பதை இங்கிருந்தே பார்க்க முடிகிறது.

அதோடு இந்த ஓடிடி தளங்களில் படங்கள், வெப் சீரிஸ், சீரியல் உள்ளிட்டவையை காணலாம். இதற்கு என்று தனியாக பணம் செலுத்த வேண்டும். இந்த பேக்கேஜ் 3, 6 மாதங்கள், ஒரு வருடம் என உண்டு. இந்த ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் மட்டுமின்றி, கிரிக்கெட், புட் பால், கபடி என விளையாட்டுகளையும் காணமுடியும்.

OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?

அதன்படி பிரபல ஓடிடி தளமான Disney+ Hotstar-ல் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் உள்ளிட்டவை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. கிரிக்கெட் தொடர் மூலமே ஹாட்ஸ்டார் தளம் பெரிய அளவு பெயர் பெற்றது. ஆனால் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இருந்து அண்மையில் ஐபிஎல் தொடர் விலகியது. தற்போது ஐபிஎல் தொடர் ஜியோ சினிமாஸ்-ல் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த F1 ரேஸ் ஷோவும் அதிலிருந்து வெளியேறியது.

OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?

இப்படி தொடர்ந்து ஒவ்வொன்றாக விலகிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல சினிமா நிறுவனமான HBO நிறுவனம் ஹாட்ஸ்டார் தளத்தில் இருந்து வெளியேறவுள்ளது. அதன்படி இந்த நிறுவனம் தங்கள் சீரிஸ் மற்றும் படங்களை இனி ஹாட்ஸ்டாருக்கு வழங்கப்போவது இல்லை. மேலும் அவர்கள் முன்பு வெளியிட்டிருந்த படங்கள் மற்றும் சீரிஸ்கள் ஹாட்ஸ்டார் தளத்தில் இருந்தும் நீக்கப்படவுள்ளது.

OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?

மேலும் HBO நிறுவனம் தயாரித்த சீரிஸ் மற்றும் படங்கள், ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று (மார்ச் 31-ம் தேதி) வரை மட்டுமே காண முடியும். ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நிறுவனத்தின் எந்த படைப்புகளும் ஹாட்ஸ்டார் தளத்தில் இருக்காது. அதன்படி இன்றுடன் இதில் இருந்த hbo நிறுவனத்தினுடைய கன்டென்ட்கள் அனைத்தும் நீக்கப்படவுள்ளது.

இந்த HBO-வானது பழம்பெரும் நிறுவனமாகும். 1980-களில் இருந்தே தற்போது வரை படங்களை தயாரித்து வருகிறது. முக்கியமாக சொல்ல வேண்டுமானால் 'Game of Thrones' சீரிஸ் உலக அளவு வரவேற்பை பெற்றது. இந்தியாவிலும் இதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனை தயாரித்தது இந்த நிறுவனம்தான்.

OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?

தற்போது ஹாட்ஸ்டாரில் இருந்து இந்நிறுவனம் விலகுவதை தொடர்ந்து SonyLiv, Amazon போன்ற மற்றொரு ஓடிடி தளத்தில் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரியவந்தது. இந்த சூழலில் HBO நிறுவனம் ஹாட்ஸ்டாரில் இருந்து விலகி அமேசான் பிரைம் உடன் இணையப்போகிறது.

அதோடு ஏற்கனவே அமேசான் பிரைமில் இருக்கும் Warner Bros Discovery அதில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் அமேசான் பிரைம், Warner Bros Discovery-யிடம் இருந்து ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் கேட்டுள்ளதாகவும், அதனை அமேசான் பிரைம் நிராகரித்துவிட்டதாகவும், இதனால் அதில் இருந்து Warner Bros Discovery விளக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?

அதே வேளையில் இதில் இருந்து விலகப்போகும் Warner Bros Discovery ஹாட்ஸ்டாருடன் இணைய வாய்ப்புள்ளது. ஆனால் ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் மார்வெல் இருக்கும் நிலையில், தற்போது Warner Bros Discovery-ம் அதில் இணைந்தால் ஹாட்ஸ்டாருக்கு அடிக்கும் பெரிய ஜாக்பாட்டாகதான் கருத முடியும்.

இருப்பினும் மார்வெல் மற்றும் Warner Bros ஆகிய இரண்டும் போட்டிக்கொண்டு படங்களை வெளியிடும். இப்படி இருக்கும்போது இவை இரண்டும் ஹாட்ஸ்டாரில் இருந்தால் எலியும் பூனையும், ஒரே வீட்டில் வைப்பதற்கு சமம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories