சினிமா

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!

நடிகர் ரோபோ சங்கரின் மெல்லிய உடல் தோற்றம் குறித்து அவரது மனைவி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விஜயகாந்தின் 'தர்ம சக்கரம்', ரஜினியின் நடிப்பில் 'படையப்பா', ஸ்ரீகாந்தின் 'ஜூட்' உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக இருந்து வந்த ரோபோ சங்கர், அப்படியே தொடர்ந்து சில படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் மிகவும் பிரபலமானார். இதனால் அவர் தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அடுத்தடுத்த ஷோக்களில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இதன் காரணமாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து.

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!

தற்போது விஜய், தனுஷ், சிவா கார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். குறிப்பாக தனுஷின் மாரி திரைப்படத்தில் ரோபோ சங்கரின் ரோல் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் இவரை தொடர்ந்து இவரது மகள் இந்திரஜாவும் நடிக்க வந்துவிட்டார்.

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!

இவரது முதல் படமே விஜயின் 'பிகில்' ஆகும். பெரிய வரவேற்பை கிடைத்த நிலையில், இவரும் தற்போது சில விளம்பர படங்களில் எல்லாம் நடித்து வருகிறார். தொடர்ந்து தற்போது ரோபா ஷங்கர் படங்களில் நடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் இவர் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார்.

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!

இதனை கண்ட ரசிகர்கள் இவருக்கு எதோ நோய் இருப்பதாகவும், சுகர் இருப்பதாகவும் வதந்தி பரப்பினர். மற்ற சிலர் இவருக்கு உடல்நல பிரச்னை இருந்தால், அது விரைவில் சரியாக வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வந்தனர். இவ்வாறாக இவரது உடல் நலம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், அவரது மனைவி பிரியங்கா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!

இது குறித்து அவர் பேசுகையில், "ரசிகர்கள் பயப்படுவது போல் எனது கணவருக்கு எந்த ஒரு நோயும் இல்லை. அவர் நடிக்கும் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்துக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறாரே தவிர வேறு ஒன்றும் இல்லை. உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் என்னுடைய கணவர் கூறுபவர். அதனால் தான் திரைப்பட வாய்ப்புக்காக தன்னுடைய கேரக்டருக்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!

ஆனால் அவர் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் பலர் தொடர்ந்து கூறி வருவது மகிழ்ச்சி. இருப்பினும் பயன்படக்கூடிய அளவுக்கு அவரது உடலில் எந்த நோயும் இல்லை." என்றார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக பாடி பில்டர் போல் காட்சியளித்த நடிகர் ரோபோ ஷங்கர் தற்போது மெல்லிய உடல் தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories