சினிமா

“மனதளவில் நான் ஒரு கலைஞன்..” - திரை ரசிகர்கள் மனதை வென்ற John Wick பட நடிகர் ரெடிக் காலமானார்..

ஜான் விக் சீரிஸ்ஸின் 4 வது பாகம் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் நிலையில், அதில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் Lance Reddick வயது முதிர்வு காரணமாக காலமானார்

“மனதளவில் நான் ஒரு கலைஞன்..” - திரை ரசிகர்கள் மனதை வென்ற John Wick பட நடிகர் ரெடிக் காலமானார்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான படம்தான் ஜான் விக். கீனு ரீவ்ஸ் நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாகமானது 2014-ல் வெளியானது. இது பெரிய வெற்றி கொடுத்ததை அடுத்து இதன் இரண்டாவது பாகம் 2017-ம் ஆண்டிலும் , மூன்றாம் பாகம் 2019-ம் ஆண்டிலும் வெளியானது. தொடர்ந்து இந்த பிடத்தகு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்தனர்.

“மனதளவில் நான் ஒரு கலைஞன்..” - திரை ரசிகர்கள் மனதை வென்ற John Wick பட நடிகர் ரெடிக் காலமானார்..

இதனால் இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு வரும் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. மாஸ் ஹிட் கொடுத்த ஜான் விக் திரைப்பட சீரிஸின் 4 பாகங்களிலும் Charon என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் Lance Reddick (லான்ஸ் ரெடிக்). இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

“மனதளவில் நான் ஒரு கலைஞன்..” - திரை ரசிகர்கள் மனதை வென்ற John Wick பட நடிகர் ரெடிக் காலமானார்..

இந்த படத்தின் அடுத்த பாகம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது ரெடிக் உயிரிழந்தது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெடிக்கிற்கு தற்போது 60 வயது ஆகும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டியில் இயற்கையான முறையில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Great Expectations
Great Expectations

பிரபல எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்தில் உருவான Great Expectations என்ற புத்தகத்தை தழுவி கடந்த 1998-ல் வெளியான Great Expectations என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் ரெடிக். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், 2013-ல் வெளியான 'White House Down' என்ற படம் இவருக்கு பெயரை பெற்று தந்தது.

White House Down
White House Down

தொடர்ந்து 2014-ல் ஜான் விக் முதல் பாகத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். இதைத்தொடர்ந்து ஜான் விக் 2, 3 பாகங்களிலும், உலகே எதிர்பார்த்து காத்திருந்த கடந்த 2021-ல் வெளியான Godzilla vs Kong படத்திலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகும் திரைப்படம்தான் ஜான் விக் 4. இது அடுத்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Godzilla vs Kong
Godzilla vs Kong

இது மட்டுமின்றி, ஹாலிவுட்டில் கறுப்பின நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத காலக்கட்டத்தில் 'தி வயர்' (The Wire) என்ற டெலிவிஷன் டிராமாவிலும் இவர் நடித்தார். இதுவும் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த ட்ராமாவில் நடித்தது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் பேசிய ரெடிக் " வயர் சீரிஸில் நடித்து முடித்த பின்னர் தான் அது சாதாரண அனுபவம் அல்ல என்பதை உணர்ந்தேன். பின்னோக்கிப் பார்த்தால், அது அவ்வளவு எளிதானது இல்லை என்பதை புரிந்துகொண்டேன்" என்றார்.

“மனதளவில் நான் ஒரு கலைஞன்..” - திரை ரசிகர்கள் மனதை வென்ற John Wick பட நடிகர் ரெடிக் காலமானார்..

தற்போது இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது ஹாலிவுட் வட்டாரத்திலும், உலக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories