சினிமா

சிறுநீரக தொற்று பாதிப்பு.. தீவிர சிகிச்சையில் சிவாங்கி.. திரையுலகில் பெரும் பரபரப்பு !

சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக இந்தி சீரியல் நடிகை சிவாங்கி ஜோஷி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

சிறுநீரக தொற்று பாதிப்பு.. தீவிர சிகிச்சையில் சிவாங்கி.. திரையுலகில் பெரும் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அண்மை காலமாக திரை பிரபலங்கள் பல்வேறு நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. அண்மையில் கூட மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ், தான் 'விட்டிலிகோ' என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

சிறுநீரக தொற்று பாதிப்பு.. தீவிர சிகிச்சையில் சிவாங்கி.. திரையுலகில் பெரும் பரபரப்பு !

இப்படி பல நடிகைகள் தாங்கள் சில நோய் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பிரபல இந்தி சீரியல் நடிகை சிவாங்கி ஜோஷி, தான் கிட்னி பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு சக நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சிறுநீரக தொற்று பாதிப்பு.. தீவிர சிகிச்சையில் சிவாங்கி.. திரையுலகில் பெரும் பரபரப்பு !

மகாராஷ்டிரா மாநிலம், பூனேவை சொந்த ஊராக கொண்ட சிவாங்கி ஜோஷி, மாடலிங்கில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். தொடர்ந்து மாடலிங் செய்து வந்த இவர், ஜீ டிவியில் 2013-ம் ஆண்டு ஒளிபரப்பாகிய 'Khelti Hai Zindagi Aankh Micholi' என்ற தொடரில் திரிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

சிறுநீரக தொற்று பாதிப்பு.. தீவிர சிகிச்சையில் சிவாங்கி.. திரையுலகில் பெரும் பரபரப்பு !

தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்த இவர், தொடர்ந்து சில இந்தி தொடர்களில் நடித்து வந்தார். மேலும் 2008-ல் வெளியான Balika Vadhu என்ற தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குழந்தை திருமணம் குறித்த இந்த தொடர் தமிழிலும் 'மண் வாசனை' என்ற பெயரில் வெளியானது. இந்த சீரியலின் இரண்டாவது சீஸன் 2021-ல் வெளியானது. இந்த தொடரிலும் சிவாங்கி ஜோஷி நடித்தார். அதுமட்டுமின்றி சில மியூசிக் வீடியோஸ், சில இந்தி தொடர்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

சிறுநீரக தொற்று பாதிப்பு.. தீவிர சிகிச்சையில் சிவாங்கி.. திரையுலகில் பெரும் பரபரப்பு !

இந்த நிலையில் தான் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சிவாங்கி ஜோஷி பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன்.

சிறுநீரக தொற்று பாதிப்பு.. தீவிர சிகிச்சையில் சிவாங்கி.. திரையுலகில் பெரும் பரபரப்பு !

மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியுடன் குணமடைந்து வருகிறேன். எனது நண்பர்களும், ரசிகர்களும் அவர்களது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இவருக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories