சினிமா

அமெரிக்காவில் கோடாரியால் தாக்கப்பட்ட பஞ்சாபி நடிகர்.. மர்மநபர் வெறிச்செயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ !

அமெரிக்காவில் மர்மநபரால் தாக்கப்பட்ட பஞ்சாபி நடிகரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவில் கோடாரியால் தாக்கப்பட்ட பஞ்சாபி நடிகர்.. மர்மநபர் வெறிச்செயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பஞ்சாபி சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகராக திகழ்ந்து வருபவர் அமன் தலிவால். இவர் சில பாலிவுட் படங்களிலும், சில சீரியல்களிலும் நடித்துவருகிறார். இவர் ரித்திக் ரோஷன் -ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகி புகழ்பெற்ற ஜோதா அக்பர் படத்தில் ரத்தன் சிங் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது அமெரிக்காவின் இருக்கும் நிலையில், அங்குள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் இவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது அங்கு கோடாரியோடு வந்த மர்மநபர் ஒருவர் அங்குள்ளவர்களை மிரட்டி வந்துள்ளார்.

அமெரிக்காவில் கோடாரியால் தாக்கப்பட்ட பஞ்சாபி நடிகர்.. மர்மநபர் வெறிச்செயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ !

மேலும், அவர்திடீரென நடிகர் அமன் தலிவாலை கொடூரமாக தாக்கியுள்ளார். அப்போது அமன் தலிவால் திடீரென அந்த மர்மநபரை தரையில் தள்ளி அவரை பிடித்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து அந்த மர்மநபரை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவத்தில் அமன் தலிவாலுக்கு மார்பு, கைகள், தலை போன்ற இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அமெரியஸாவின் கலிபோர்னியாவில் உள்ள கிராண்ட் ஓக்ஸில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடல்முழுக்க கட்டுகள் போட்டபடியும், தழும்புகளுடனும் உள்ள நடிகர் அமன் தலிவாலின் புகைப்படமும் வெளியா இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories