சினிமா

“மாதந்தோறும் அவங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்குறேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” -நடிகை தாப்ஸி

நடிகை தாப்ஸி, தனது டயட்டீஷியனுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

“மாதந்தோறும் அவங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்குறேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” -நடிகை தாப்ஸி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தாப்ஸி பன்னு. தெலுங்கில் அறிமுகமாகிய இவரது, இரண்டாவது படமே தமிழில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்தார். 2011-ல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த படமானது தாப்ஸிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து.

“மாதந்தோறும் அவங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்குறேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” -நடிகை தாப்ஸி

இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு என நடித்து வந்த இவர் இந்தி திரையுலகில் 2012-ல் அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து தற்போது இந்தி திரையுலகிலேயே கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது விளம்பர படங்களில் நடித்து வரும் இவர், இறுதியாக விஜய் சேதுபதியுடன் 'அனபெல் சேதுபதி' படத்தில் நடித்திருந்தார்.

“மாதந்தோறும் அவங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்குறேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” -நடிகை தாப்ஸி

தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் கைவசம் ஜெயம்ரவியுடன் 'ஜன கன மன' படமும், ஏலியன் படமும் வைத்துள்ளார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அரசியல் ரீதியாகவும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார். குறிப்பாக கங்கனா ரணாவத் கருத்துக்கு முரண்பாடாக இவர் ஏதாவது கருத்து தெரிவிப்பார்.

“மாதந்தோறும் அவங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்குறேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” -நடிகை தாப்ஸி

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது மாடல் புகைப்படத்தை பதிவிட்டு வருவார். அண்மையில் கூட, இவர் ராம்ப் வாக் செய்யும் விடியோவையும், இரண்டு நாட்களுக்கு முன்னர் வயலட் கலர் சாரியில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

“மாதந்தோறும் அவங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்குறேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” -நடிகை தாப்ஸி

இந்த நிலையில், தனது உடல் கட்டுக்கோப்பாக இருக்க, தனது டயட்டீஷியனுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கொடுப்பதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இதுகுறித்து பேசினார். அப்போது பேசிய அவர், "எனது உடலை ஆரோக்கியமாக கட்டுக்கோப்பாக வைத்திருக்க மாதந்தோறும் டயட்டீஷியனுக்கு ரூ.1 லட்சம்கொடுத்து வருகிறேன்.

எனது அப்பாவுக்கு இது தெரிந்தால் என்னை திட்டுவார். ஏனென்றால் அவர் மிகவும் சிக்கனமானவர். வாழ்நாள் முழுவதும் பணம் சேமித்த பிறகும், அவர் தனக்காக செலவு செய்வதில்லை. எனக்கும், என் சகோதரிக்கும் பிரம்மாண்ட திருமணத்தை நடத்துவது பற்றி அவர் கவலைப்படுகிறார். ஆனால், நாங்கள் அவருக்காக செலவழிக்கும்போது கோபப்படுகிறார்.

“மாதந்தோறும் அவங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்குறேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” -நடிகை தாப்ஸி

நான் என்ன படம் செய்கிறேன், என் வாழ்க்கையில் எங்கே இருக்கிறேன் என்பதைப் பொறுத்து எனது உணவுமுறை தொடர்ந்து மாறுகிறது. ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குப் பிறகு, உடலில் மாற்றங்கள் நிகழும். உடல் ஆரோக்கியத்துக்காக நமக்கு மற்றவரது ஆலோசனை தேவைப்படுகிறது.

பிற்காலத்தில் மருத்துவமனைகளுக்கு செலவு செய்வதற்கு பதிலாக, அதில் ஒரு பகுதியை இப்போது டயட்டீஷியனுக்கு கொடுத்து வருகிறேன்." என்றார். நடிகை தாப்ஸி, தனது டயட்டீஷியனுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கொடுப்பதாக தெரிவித்துள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories