சினிமா

பிரபல பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு எதிராக இணையத்தில் வலுக்கும் கண்டன குரல்.. காரணம் என்ன?

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா புகைப்பிடிப்பது போன்று படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் அவருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு எதிராக இணையத்தில் வலுக்கும் கண்டன குரல்.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகள் அனன்யா. இவர் ’ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதன் பின்னர் ’பதி பட்னி அவுர் வோ’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரிய வரவேற்பை கொடுத்தது. மேலும் பிலிம்பேர் விருதையும் வென்றுகொடுத்தது.

சமீபத்தில் வெளியான ’லைகர்’ படத்தில் விஜய் தோவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் நான்கு மொழிகளில் வெளியானாலும் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.

பிரபல பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு எதிராக இணையத்தில் வலுக்கும் கண்டன குரல்.. காரணம் என்ன?

தற்போது இவர் 'ட்ரீம் கேர்ள் 2' படத்தில் ஆயுஷ்மான் குரோனாவுக்கு ஜோடியாகவும், 'கோ கயே ஹம் கஹாம்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அனன்யா புகைப்பிடிப்பது போன்ற ஒரு படம் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்த அலனா, ஜவர் மெக்ரே ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் நடிகை அனன்யா கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த சிலருடன் சேர்ந்து அவர் புகைப்பிடித்துள்ளார். இதை திருமணத்தில் கலந்து கொண்ட ஒருவர்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை அனன்யாவுக்கு எதிராக இணையத்தில் வலுக்கும் கண்டன குரல்.. காரணம் என்ன?

ஆனால் Reddit பயனர் ஏற்கனவே இந்த படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அனன்யா புகைப்பிடிப்பவராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"இது உங்களை அல்லது வேறு யாரையும் எப்படிப் பாதிக்கிறது? நீங்கள் புகைப்பிடிக்காதவராகவும், மது அருந்தாதவராகவும் இருந்தால் உங்களுக்கு நல்லது. ஆனால் வேறொருவரின் வாழ்க்கையில் உங்கள் மூக்கை நுழைப்பதை நிறுத்துங்கள்" என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories