சினிமா

முதல் ஆவணப்படத்திலேயே ஆஸ்கர் வென்ற தமிழ் பெண்.. யார் இந்த கார்த்திகி கோன்சால்வெஸ் ?

ஆவணப்பட பிரிவில் இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்ற படமாக ’The Elephant Whisperers’ மாறியுள்ளது.

முதல் ஆவணப்படத்திலேயே ஆஸ்கர் வென்ற தமிழ் பெண்..  யார் இந்த கார்த்திகி கோன்சால்வெஸ் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2023 விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’Everything All At Once' திரைப்படம் 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ள நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

அதேபோல மற்றொரு இந்திய ஆவணப் படமான ’The Elephant Whisperers’ குறும்படத்துக்கும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆவணப்பட பிரிவில் இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்ற படமாக ’The Elephant Whisperers’ மாறியுள்ளது.

முதல் ஆவணப்படத்திலேயே ஆஸ்கர் வென்ற தமிழ் பெண்..  யார் இந்த கார்த்திகி கோன்சால்வெஸ் ?

இந்த திரைப்படத்தை குனீத் மோங்கா, அசின் ஜெயின், கார்த்திகி கோன்சால்வெஸ், டக்ளஸ் புஷ் ஆகியோர் சேர்ந்து தயாரித்துள்ளனர். நீலகிரியைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வெஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கார்த்திகியின் தந்தை திமோதி கோன்சால்வெஸ் சென்னை ஐ ஐ டியில் கல்வி பயின்று பின்னர் அமெரிக்கா சென்று அங்கு பல்வேறு ஐ.டி நிருவனங்களில் பணிபுரிந்துள்ளார். பின்னர் நாடு திரும்பி ஐடி நிறுவனங்கள் தொடங்கி நடத்தியுள்ளார்.

முதல் ஆவணப்படத்திலேயே ஆஸ்கர் வென்ற தமிழ் பெண்..  யார் இந்த கார்த்திகி கோன்சால்வெஸ் ?

டிஸ்கவரி உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றியு கார்த்திகிகைப்படக் கலைஞராகவும் காட்டுயிர் ஆர்வலராகவும் இருந்து வருகிறார். தெப்பக்காடு யானைகள் சரணாலயத்துக்கு அடிக்கடி சென்று வந்த கார்த்திகியிக்கு கைவிடப்பட்ட ரகு என்ற யானைக்குட்டிக்கும் அதைப் பராமரிக்கும் பொம்மன் பெள்ளி என்பவர்களுக்கு இடையே உருவான பிணைப்பு தெரியவந்துள்ளது. உடனடியாக அது குறித்து ஆவணப் படம் எடுக்க முடிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர்களின் அந்த பந்தத்தை குறித்து 'The Elephant Whisperers' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அவரின் முதல் ஆவணப்படமான 'The Elephant Whisperers' திரைப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்ற நிலையில், ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு தற்போது ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories