சினிமா

“22 ஆண்டுகால சினிமா வாழ்வில் இதுதான் முதல்முறை”: Hollywoodல் நடிக்கும் பிரியங்கா சோப்ரா பேச்சால் சலசலப்பு

முதல் முறையாக ஆண் நடிகருக்கு இணையாக தான் சம்பளம் பெற்றதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

“22 ஆண்டுகால சினிமா வாழ்வில் இதுதான் முதல்முறை”: Hollywoodல் நடிக்கும் பிரியங்கா சோப்ரா பேச்சால் சலசலப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் ஒருவர்தான் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் முதல் முறையாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தொடர்ந்து பாலிவுட்டில் மட்டுமே இருந்த இவர், 2012-ம் ஆண்டில் ஆங்கில படம் ஒன்றிற்கு Narrator ஆக அறிமுகமானார். அதன்பிறகு ஒரு ஆங்கில படத்திற்கு பின்னணி குரல் கொடுத்தார். மீண்டும் இந்தி படங்களிலே தொடர்ச்சியாக நடித்து வந்த இவர் பிரபல அமெரிக்கா பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலிக்க தொடங்கினார்.

“22 ஆண்டுகால சினிமா வாழ்வில் இதுதான் முதல்முறை”: Hollywoodல் நடிக்கும் பிரியங்கா சோப்ரா பேச்சால் சலசலப்பு
Gareth Cattermole

இவர்கள் இருவரது உறவும் 2018-ல் திருமண பந்தத்தில் முடிந்தது. ஜோன்ஸை விட பிரியங்கா 10 வயது மூத்தவராக இருந்ததால், இந்திய ரசிகர்கள் கிசுகிசுத்து வந்தனர். தற்போது 40 வயதுடைய பிரியங்கா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்தார்.

“22 ஆண்டுகால சினிமா வாழ்வில் இதுதான் முதல்முறை”: Hollywoodல் நடிக்கும் பிரியங்கா சோப்ரா பேச்சால் சலசலப்பு

அதன்படி இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததால் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது இருந்தது. இதனால் பல மாதங்களாக தனது குழந்தையின் முகத்தை வெளி உலகிற்கு காட்டாமலே இருந்து வந்தார் பிரியங்கா. மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என்று பெயர் கொண்ட தனது குழந்தையை அண்மையில் உலகுக்கு காட்டினார்.

“22 ஆண்டுகால சினிமா வாழ்வில் இதுதான் முதல்முறை”: Hollywoodல் நடிக்கும் பிரியங்கா சோப்ரா பேச்சால் சலசலப்பு

தொடர்ந்து தற்போது மீண்டும் படங்கள், சீரிஸ்கள் நடித்து வரும் இவர் இணையத்தொடரிலும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆங்கில திரைப்படங்கள் மட்டும் நடித்து வரும் இவர், தற்போது 'Love Again' என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'Citadel' என்ற ஹாலிவுட் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ரூஸ்ஸோ சகோதரர்களான (Russo brothers) ஜோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ இந்த தொடரை இயக்குகின்றனர். இவர்கள்தான் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் ஆகியவற்றையும் இயக்கியுள்ளனர்.

“22 ஆண்டுகால சினிமா வாழ்வில் இதுதான் முதல்முறை”: Hollywoodல் நடிக்கும் பிரியங்கா சோப்ரா பேச்சால் சலசலப்பு

வரும் ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'Citadel' தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதோடு இந்த தொடர் இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த தொடரின் ட்ரைலர் கடந்த 6-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

“22 ஆண்டுகால சினிமா வாழ்வில் இதுதான் முதல்முறை”: Hollywoodல் நடிக்கும் பிரியங்கா சோப்ரா பேச்சால் சலசலப்பு

இந்த தொடருக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மேலும் தென்மேற்கு திரைப்பட விழா (SXSW) 2023-ல் அமேசான் ஸ்டுடியோஸ் தலைவர் ஜெனிபர் சல்கே உடன் நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது, தான் முதல் முறையாக ஆண் நடிகருக்கு இணையான ஊதியத்தைப் பெற்றதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், "இதைச் சொல்வதால் நான் சிக்கலில் சிக்கக்கூடும். இருப்பினும் சொல்கிறேன். நான் சுமார் 22 வருடங்களாக இந்த திரைத் துறையில் பணியாற்றி வருகிறேன். கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட அம்சங்களிலான திரைப்படங்களில் நடித்து விட்டேன். உலகளாவிய இரண்டு டிவி நிகழ்ச்சிகளையும் செய்துள்ளேன்.

“22 ஆண்டுகால சினிமா வாழ்வில் இதுதான் முதல்முறை”: Hollywoodல் நடிக்கும் பிரியங்கா சோப்ரா பேச்சால் சலசலப்பு

ஆனால் நான் 'Citadel வெப் தொடரில் நடித்தபோதுதான், முதல் முறையாக எனது சம்பளம் சமமாக இருந்தது. . எனது கேரியரில் முதல்முறையாக ஆண் நடிகருக்கு இணையான ஊதியத்தை நான் பெற்றுள்ளேன்.

இதைப் பற்றி சொல்லி இப்போது சிரிக்கிறேன், ஆனால் இது எனது சினிமா வாழ்க்கையில் வெகுகாலம் உறுத்தலாகவே இருந்து வந்த விஷயம். நான் இதே அளவிலான உழைப்பையும் நேரத்தையும் மற்ற படங்களுக்கு கொடுக்கிறேன். ஆனால், குறைவான ஊதியமே கிடைக்கிறது." என்று பேசினார்.

banner

Related Stories

Related Stories