சினிமா

'விடுதலை' படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தில் நாயகனாகும் சூரி.. ஃபர்ஸ்ட் லுக்கு போஸ்டர் வெளியீடு!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

'விடுதலை' படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தில் நாயகனாகும் சூரி.. ஃபர்ஸ்ட் லுக்கு போஸ்டர் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகத் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் சூரி. இவரை முதல்முறையாக கதாநாயகனாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் கதையானது தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை உருவாக்கிய நிலையில், இந்த படத்திற்காக நடிகர் சூரி '6 பேக்' வைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெற்றிமாறனின் 'வட சென்னை ' போல் இரண்டு உருவாகவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தது.

'விடுதலை' படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தில் நாயகனாகும் சூரி.. ஃபர்ஸ்ட் லுக்கு போஸ்டர் வெளியீடு!

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. பின்னர் இந்த படத்தின் முதல் பாடலான "ஒன்னோட நடந்தா.." என்ற பாடல் வெளியானது. இதையடுத்து மகளிர் தினத்தன்று விடுதலை படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக முதல் முறையாக அறிமுகமாகவுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தைக் 'கூழாங்கல்' இயக்குநர் பி.எஸ்.விகோத்ராஜ் இயக்குகிறார். மேலும் 'கும்பலங்கி நைட்ஸ்', 'ஹெலன்', 'கப்பா' போன்ற மலையாள படங்களில் நடித்த அன்னா பென் இப்படத்தில் நடிகை சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'கொட்டுக்காளி' என பெயரிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories