சினிமா

Netflix வெளியிட்டுள்ள ஆவணப்படத்தால் மீண்டும் பரபரப்பு: 9 ஆண்டுக்குப் பிறகு பேசு பொருளாகும் MH370 விமானம்!

2014ம் ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான MH370 விமானம் குறித்து Netflix ஆவணப்படம் ஒன்று வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Netflix வெளியிட்டுள்ள ஆவணப்படத்தால் மீண்டும் பரபரப்பு: 9 ஆண்டுக்குப் பிறகு பேசு பொருளாகும் MH370 விமானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து 239 பயணிகளுடன் MH370 என்ற விமானம் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சுமார் 2 மணி நேரத்திலேயே விமான நிலையத்துடனான தனது தொடர்பை இழந்துள்ளது.

இதையடுத்து இந்த விமானம் கடத்தப்பட்டது என முதலில் எல்லோரும் அச்சமடைந்தனர். பின்னர் விமானம் கடத்தப்படவில்லை என்பது உறுதியானது. பின்னர் விமானம் எப்படி மாயமானது என்பது குறித்து தீவிரமாகத் தேடியதில் கடைசியாக விமானத்தில் சிக்னல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சென்றதைக் காட்டியுள்ளது. அதன் பின்னர் விமானம் எங்ககு சென்றது என்பதை யாரோலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

Netflix வெளியிட்டுள்ள ஆவணப்படத்தால் மீண்டும் பரபரப்பு: 9 ஆண்டுக்குப் பிறகு பேசு பொருளாகும் MH370 விமானம்!
Netflix வெளியிட்டுள்ள ஆவணப்படத்தால் மீண்டும் பரபரப்பு: 9 ஆண்டுக்குப் பிறகு பேசு பொருளாகும் MH370 விமானம்!

இதனால் விமானத்தில் பழுது ஏற்பட்டு ஆழ்கடலில் மூழ்கி இருக்கலாம் என அப்போதைய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்திருந்தார். ஆனால் விமானம் கடலில் விழுந்ததற்கான எந்த அடையாளங்களும் கிடைக்காததால் தற்போது வரை MH370 விமானம் குறித்த தகவல் மர்மமாகவே இருந்து வருகிறது.

மேலும் விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் உடல்களைக் கூட பார்க்க முடியாமல் அவர்களது உறவினர்கள் வேதனையுடன் இருந்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் இந்த விமானம் மாயமான தேதியில் விமானத்தைத் தேட வேண்டும் அவர்களது உறவினர்கள் மலேசிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாயமான இந்த விமானத்தை மையப்படுத்தி MH370 The Plane That Disapoeared என்ற ஆவணப்படத்தை Netflix விமானம் மாயமான அதே தேதியில் நேற்று வெளியிட்டுள்ளது. தற்போது இந்த ஆவணப்படம் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் MH370 விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுடன் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் விமானத்தைத் தேடிச் சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரின் சாகச பயணங்கள் குறித்த தகவல்களுடம் இருக்கிறது. ஆனால் விமானம் மாயமானது குறித்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் ஆவணப்படத்தை பார்ப்பவர்களே முடிவு செய்யும்படி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories