சினிமா

நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயம் ? - வெளியான தகவலுக்கு சிம்பு தரப்பினர் கூறியது என்ன ?

நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயம் ? - வெளியான தகவலுக்கு சிம்பு தரப்பினர் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் அறிமுகமான இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றார். அதன்பிறகு காதல் அழிவதில்லை படத்தில் இளைஞராக அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக, பாடகராக, பாடலாசியராக, தயாரிப்பாளராக பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு உள்ளிட்ட படங்கள் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயம் ? - வெளியான தகவலுக்கு சிம்பு தரப்பினர் கூறியது என்ன ?

தற்போது 'பத்து தல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே அவரது காதல் மற்றும் திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் வதந்திகள் அடிக்கடி வெளியாகும். தற்போது 40 வயதாகும் இவருக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனால் இவரது திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வெளியாகும். அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கும் இவருக்கும் காதல் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து இரு தரப்பினரும் மறுப்பு தெரிவித்து விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயம் ? - வெளியான தகவலுக்கு சிம்பு தரப்பினர் கூறியது என்ன ?

இதையடுத்து தொடர்ந்து இவரது திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியானது. அண்மையில் கூட இலங்கை சில யூடியூப் சேனல்களில் சிம்புவுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து விட்டதாகவும், இலங்கையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு நிச்சயம் செய்துவிட்டதாகவும் தகவல் பரப்பி வந்தனர்.

நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயம் ? - வெளியான தகவலுக்கு சிம்பு தரப்பினர் கூறியது என்ன ?

இந்த நிலையில் இந்தத் திருமண தகவல்களுக்கு சிம்பு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிம்புவின் மேலாளர் பேசுகையில், "இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக சில மீடியாக்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. இதனை கடுமையாக மறுக்கிறோம்.

மீடியா நண்பர்கள் திருமணம் போன்ற விஷயங்களில் எங்களிடம் உறுதிபடுத்திவிட்டு செய்திகளை வெளியிடுங்கள். நல்ல செய்தி என்றால் முதலில் உங்களை அழைத்து உங்களிடம் தான்‌ பகிர்ந்துகொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிம்புவுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று கூறி அவரது தந்தை டி.ராஜேந்தர் கோயிலுக்கு சென்று பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories