சினிமா

Update மேல் Update.. இணையத்தில் வைரலாகி வரும் T67 பூஜை வீடியோ.. யார் யார் அதில் இருக்கிறார் தெரியுமா ?

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் 'விஜய் 67' படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update மேல் Update.. இணையத்தில் வைரலாகி வரும் T67 பூஜை வீடியோ.. யார் யார் அதில் இருக்கிறார் தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.

Update மேல் Update.. இணையத்தில் வைரலாகி வரும் T67 பூஜை வீடியோ.. யார் யார் அதில் இருக்கிறார் தெரியுமா ?

இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்தார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த 11-ம் தேதி வெளியானது. துணிவா? வாரிசா? என்ற போட்டி நிலவி வந்த நிலையில் துணிவுடன் வாரிசு வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

Update மேல் Update.. இணையத்தில் வைரலாகி வரும் T67 பூஜை வீடியோ.. யார் யார் அதில் இருக்கிறார் தெரியுமா ?

இதன் வெற்றி கொண்டாட்டமும் அண்மையில் படக்குழுவினர் கொண்டாடினர். இதனிடையே விஜயின் 67-வது படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்குவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது. அதன்படி இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Update மேல் Update.. இணையத்தில் வைரலாகி வரும் T67 பூஜை வீடியோ.. யார் யார் அதில் இருக்கிறார் தெரியுமா ?

வாரிசு படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்கள் வரத்தொடங்கியது. அதன்படி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Seven Screen Studio எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கவுள்ளார். எடிட்டிங் பிலோமின் ராஜ், இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ், ரத்தின குமார், தீரஜ் வைத்தி ஆகியோர் வசனம் எழுதவுள்ளனர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், குழுக்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நேற்றைய முந்தினம் அறிவித்திருந்தனர்.

Update மேல் Update.. இணையத்தில் வைரலாகி வரும் T67 பூஜை வீடியோ.. யார் யார் அதில் இருக்கிறார் தெரியுமா ?

இதையடுத்து நேற்று காலை இந்த படக்குழு முதற்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், விமானத்தில் பயணிக்கவிருக்கும் படக்குழுவினரின் பெயர்களும் இணையத்தில் வெளியானது. அதில் திரிஷா, பிரியா ஆனந்த் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் இந்த படத்தில் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக ரசிகர்களுக்கு தெரியவந்தது.

இதில் நடிக்கப்போகும் நடிகர்கள் யார் யார் என ரசிகர்கள் குழம்பி கொண்டிருக்கையில் நேற்று மாலை Seven Screen Studio இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பட்டியலை என தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்று அப்டேட் வழங்கி வந்தது. அதன்படி இந்த படத்தில் இந்தி, மலையாளம் மொழிகளில் உள்ள நடிகர்கள், தமிழில் மாஸ் ஹீரோ வில்லன் என ஒரு திரைப்பட்டாளத்தையே இறக்கியுள்ளது.

Update மேல் Update.. இணையத்தில் வைரலாகி வரும் T67 பூஜை வீடியோ.. யார் யார் அதில் இருக்கிறார் தெரியுமா ?

இது குறித்து வெளியான அறிவிப்பின் படி, இந்த படத்தில் பிரபல இந்தி நடிகரும் KGF 2 வில்லனுமான 'சஞ்சய் தத்', பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், மன்சூர் அலிகான், மாத்திவ் தாமஸ் (மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்), கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

மேலும் இந்த படத்தின் பாடல்கள், ப்ரோமோஷன் தொடர்பான உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் அப்போது இது தொடர்பான புகைப்படங்கள், தகவல்கள், வீடியோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பூஜையில் பூஜையில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories