சினிமா

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை.. முதல் முறை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா.. “எப்படி ஒரு போஸ் !”

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை.. முதல் முறை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா.. “எப்படி ஒரு போஸ் !”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் ஒருவர்தான் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் முதல் முறையாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தொடர்ந்து பாலிவுட்டில் மட்டுமே இருந்த இவர், 2012-ம் ஆண்டில் ஆங்கில படம் ஒன்றிற்கு Narrator ஆக அறிமுகமானார். அதன்பிறகு ஒரு ஆங்கில படத்திற்கு பின்னணி குரல் கொடுத்தார். மீண்டும் இந்தி படங்களிலே தொடர்ச்சியாக நடித்து வந்த இவர் பிரபல அமெரிக்கா பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலிக்க தொடங்கினார்

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை.. முதல் முறை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா.. “எப்படி ஒரு போஸ் !”
Gotham

இவர்கள் இருவரது உறவும் 2018-ல் திருமண பந்தத்தில் முடிந்தது. ஜோன்ஸை விட பிரியங்கா 10 வயது மூத்தவராக இருந்ததால், இந்திய ரசிகர்கள் கிசுகிசுத்து வந்தனர். தற்போது 40 வயதுடைய பிரியங்கா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்தார்.

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை.. முதல் முறை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா.. “எப்படி ஒரு போஸ் !”

அதன்படி இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததால் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது இருந்தது. இதனால் பல மாதங்களாக தனது குழந்தையின் முகத்தை வெளி உலகிற்கு காட்டாமலே இருந்து வந்தார் பிரியங்கா. சில நாட்கள் கழித்து தனது மகளுக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என்று பெயர் வைத்தார்.

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை.. முதல் முறை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா.. “எப்படி ஒரு போஸ் !”

தனது இன்ஸ்டா பக்கத்தில் கூட குழந்தையின் முகத்தை மறைத்துதான் பதிவேற்றுவார். ஆனால் தற்போது இவரது குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரின் சகோதரர்கள் கலந்துகொண்ட 'வாக் ஆஃப் ஃபேம்' (Walk of Fame) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை.. முதல் முறை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா.. “எப்படி ஒரு போஸ் !”

இதில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது ஜோன்ஸின் சகோதரர்களின் மனைவிகள், உறவினர்களுடன் பிரியங்கா சோப்ரா அமர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா தனது மடியில் தனது மகளை அமரச்செய்திருந்தார். அப்போது அவர் தனது மகள் 'மால்தி மேரி சோப்ரா ஜோன்சை தூக்கி பிடித்தபடி உயர்த்தி முதன்முறையாகப் பத்திரிகையாளர்களுக்குக் காட்டினார்.

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை.. முதல் முறை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா.. “எப்படி ஒரு போஸ் !”

மேலும் அந்த நிகழ்வில் குடும்பத்தோடு குரூப் போட்டோ எடுக்கும்போதும் குழந்தையின் முகத்தை அனைவருக்கும் காட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. குழந்தைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை.. முதல் முறை அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா.. “எப்படி ஒரு போஸ் !”

தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறியுள்ளார். சொந்தமாக ஆடைகள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories