சினிமா

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்.. பெயர் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? : முழு அப்டேட் இங்கே!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் பெயர் LGM என வைக்கப்பட்டுள்ளது.

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்..  பெயர் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? : முழு அப்டேட் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்தது யார் என்று கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர் மகேந்திர சிங் தோனிதான். இவர் கேப்டனாக பதவியேற்ற பிறகுதான், இந்திய அணியை மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு சேர்த்தார்.

தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று விதமான போட்டிகளிலும் கோப்பை வென்றது. மேலும் இப்படி மூன்று கோப்பைகளும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை தோனி மட்டுமே செய்து அசத்தியுள்ளார்.

பின்னர் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் உரிமையாளராகவும் இவர் உள்ளார்.

தற்போது திரைத்துறையிலும் தோனி தனது கால் தடத்தை பதித்துள்ளார். 'தோனி எண்டர்டென்மெண்ட்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தோனி தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தை முதலில் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்..  பெயர் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? : முழு அப்டேட் இங்கே!

இதையடுத்து திரைப்படத்தைத் தயாரிக்க தோனி முன்வந்துள்ளார். அதுவும் முதல் முறையாக தமிழ் படத்தைத்தான் தோனி தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

இந்நிலையில், தோனி எண்டர்டென்மெணட் தயாரிக்கும் முதல் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. படத்தின் பெயர் Lets Get Married (LGM) என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். மேலும் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்த இவானா ஆகியோர் நடிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories