சினிமா

பள்ளி மாணவர்களுக்கு இங்கிலீஷ் டீச்சரான நடிகை நித்யா மேனன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நடிகை நித்யா மேனன் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இங்கிலீஷ் டீச்சரான நடிகை நித்யா மேனன்..  இணையத்தில் வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நித்யா மேனன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியை அடுத்துப் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளி மாணவர்களுக்குப் ஆங்கிலப் பாடம் எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இங்கிலீஷ் டீச்சரான நடிகை நித்யா மேனன்..  இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இவர் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்து வரும் படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார். பின்னர் படப்பிடிப்பு முடிந்த பிறகு அங்கு உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று மாணார்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் வகுப்பறையில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பாடம் எடுத்துள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "பள்ளி மாணவர்களுக்கு எனது புத்தாண்டு. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாகவும் குழந்தைத்தனமாகவும் இருக்கிறார்கள்" என்றும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் நடிகை நித்யா மேனனை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories