சினிமா

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது பதான் பட ட்ரைலர்.. தமிழில் விஜய் வெளியிட காரணம் என்ன ? Unexpected

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது பதான் பட ட்ரைலர்.. தமிழில் விஜய் வெளியிட காரணம் என்ன ? Unexpected
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம்தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படம், வரும் 25-ம் தேதி வெளியாகிவுள்ளது.

திரையரங்கில் வெளியாகும் இந்த படத்திற்காக ஷாருக் ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கினற்னர். ஒவ்வொரு அப்டேட்டும் வரும்போது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது பதான் பட ட்ரைலர்.. தமிழில் விஜய் வெளியிட காரணம் என்ன ? Unexpected

அந்த வகையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் 'Besharam Rang' என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' என்ற பெயரில் இந்த பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக அமைச்சர்கள், இந்துத்துவ கும்பல் பலரும் கண்டங்கள் தெரிவித்து வந்தனர்.

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது பதான் பட ட்ரைலர்.. தமிழில் விஜய் வெளியிட காரணம் என்ன ? Unexpected

தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், வெளியிட்டால் திரையரங்கு கொளுத்தப்படும் எனவும் இந்துத்துவ கும்பல் ஒரு பயங்கரவாதி போல் மிரட்டல் விடுத்தது வருகின்றனர். அதோடு ஷாருக், தீபிகாவின் உருவப்படமும் எரித்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது பதான் பட ட்ரைலர்.. தமிழில் விஜய் வெளியிட காரணம் என்ன ? Unexpected

தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்தபோதிலும், இதனை பெரிதும் கண்டுகொள்ளாத திரைபடக்குழு அடுத்தடுத்து தங்கள் பாடல்களை வெளியிட்டு, இந்துத்துவ கும்பலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை நிரூபித்தது.

இந்த நிலையில் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ள பதான் படத்தின் தமிழ் ட்ரைலரை, நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டரில், "பதான் படத்திற்காக ஷாரூக்கானிற்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்.. தமிழ் ட்ரைலர் இங்கே உள்ளது" என்று குறிப்பிட்டு லிங்கையும் பதிவேற்றியிருந்தார்.

இந்த நிலையில் ஷாருக் படத்தின் ட்ரைலரை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடிகர் விஜய் வெளியிட்டதால், ட்விட்டரில் #Unexpected என்று ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. திடீரென்று நடிகர் விஜய் இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது பதான் பட ட்ரைலர்.. தமிழில் விஜய் வெளியிட காரணம் என்ன ? Unexpected

இருப்பினும் பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக் படத்தின் ட்ரைலரை அவருக்கு நிகராக இருக்கும் நடிகர் விஜய் தமிழில் வெளியிட்டுள்ளார். மேலும் இதன்மூலம் தமிழில் ஒரு ப்ரோமோஷனும் கிடைக்கும். அதுமட்டுமின்றி நாளை விஜயின் வாரிசு வெளியாகவுள்ளதால் விஜயின் இந்த டுவீட் மூலம் இரு படங்களுக்கும் ஒரு ப்ரோமோஷன் என்று இணையத்தில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது பதான் பட ட்ரைலர்.. தமிழில் விஜய் வெளியிட காரணம் என்ன ? Unexpected

தொடர்ந்து தமிழ் ட்ரைலரை வெளியிட்ட விஜய்க்கு ஷாருக் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மிக்க நன்றி நண்பா.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம். Love you" என்று குறிப்பிட்டுள்ளார்.

வரும் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலரை தெலுங்கில் நடிகர் ராம்சரண் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories