சினிமா

விஜயின் 'வாரிசு' பட பிரபலம் திடீர் மறைவு.. சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர் !

வாரிசு படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் சுனில் பாபு மாரடைப்பால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் 'வாரிசு' பட பிரபலம் திடீர் மறைவு.. சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடிகர் விஜய் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாக இருக்கும் படம்தான் 'வாரிசு'. வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் யோகி பாபு, ரஷ்மிகா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விஜயின் 'வாரிசு' பட பிரபலம் திடீர் மறைவு.. சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர் !

இந்த படத்தின் ஆடியோ லான்ச் அண்மையில் பிராம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பல ஸ்வாரஸ்யங்கள் அரங்கேறியது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளியானது. குடும்ப திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

விஜயின் 'வாரிசு' பட பிரபலம் திடீர் மறைவு.. சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர் !

வரும் 11-ம் தேதி தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதளவு காத்துக்கொண்டிருக்கின்றனர். வாரிசு உடன் அஜித்தின் துணிவும் நேரடியாக களம் காண இருப்பதால் இந்த பொங்கல் திரை ரசிகர்களுக்கு மஜாவான பொங்கலாக இருக்கும்.

விஜயின் 'வாரிசு' பட பிரபலம் திடீர் மறைவு.. சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர் !

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்றிய சுனில் பாபு என்பவர் கொச்சியில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். பிரபல புரொடக்‌ஷன் டிசைனர் சாபு சிரிலின், முன்னாள் இணை டிசைனரான இருந்தார்.

விஜயின் 'வாரிசு' பட பிரபலம் திடீர் மறைவு.. சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர் !

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் பெரிய படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழில் விஜயின் - துப்பாக்கி, உருமி, சூர்யாவின் - கஜினி உள்ளிட்ட படங்களில் புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் சுனில் பாபு தமிழில் இதுவரை துப்பாக்கி, உருமி, கஜினி உள்ளிட்ட படங்களில் புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்றி உள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும் ஆர்ய சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர். சுனில் பாபு கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தில் பணியாற்றிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories