சினிமா

ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. திரையரங்கில் வெளியாகும் விஜய் - அஜித் சேர்ந்து நடித்த படம்? தெறிக்க விடலாமா..

விஜய் - அஜித் சேர்ந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் வரும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சில திரையரங்கள் மறு வெளியீடு வரவுள்ளது.

ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. திரையரங்கில் வெளியாகும் விஜய் - அஜித் சேர்ந்து நடித்த படம்? தெறிக்க விடலாமா..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சிறந்தவர்களாக இருப்பவர்கள் அஜித் -விஜய். இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இருவரது படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இருவருக்குள்ளும் நட்புறவு இருந்தாலும், இவர்கள் ரசிகர்களுக்கு 'நீயா நானா' என்ற மோதல்கள் இன்று வரை காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீசாக நேருக்கு நேர் மோதுகிறது என்றால், எந்த படம் சிறந்தது என்று அடித்துக்கொள்வார்கள் ரசிகர்கள். ஒரே நாளில் வெளியாகமல் வெவ்வேறு மாதங்களில் வெளியானால் கூட அதே சம்பவம்தான் நடைபெறும். அதோடு இரு படங்களையும் வைத்து ட்ரோல் செய்து விளையாடுவர் இருதரப்பு ரசிகர்களும்.

ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. திரையரங்கில் வெளியாகும் விஜய் - அஜித் சேர்ந்து நடித்த படம்? தெறிக்க விடலாமா..

அந்த வகையில் தற்போது சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - அஜித் படங்களான 'வாரிசு' - 'துணிவு' நெருக்கு நேர் வரும் பொங்கலுக்கு களம் காணவுள்ளது. இரு படங்களின் குழுக்களும் அதன் அப்டேட்களை போட்டா போட்டி கொண்டு வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் துணிவின் ட்ரைலர் ரிலீசாக தற்போது வரை நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மேலும் இன்று மாலை வாரிசின் ட்ரைலர் வரவுள்ளது.

ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. திரையரங்கில் வெளியாகும் விஜய் - அஜித் சேர்ந்து நடித்த படம்? தெறிக்க விடலாமா..

இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு முன்னாடி (11-ம் தேதி) திரையரங்கில் ரிலீஸாகவிருக்கும் நிலையில், அஜித் - விஜய் ரசிகர்களுக்கு தற்போது ஒரு சர்பிரைஸ் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் - விஜய் இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் ஒரு சில திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யவிருக்கிறது.

ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. திரையரங்கில் வெளியாகும் விஜய் - அஜித் சேர்ந்து நடித்த படம்? தெறிக்க விடலாமா..

அதன்படி சென்னையிலுள்ள AGS சினிமாஸில் 6 முதல் 10-ம் தேதி வரை இப்படம் வெளியாகிவுள்ளதாக 'புக் மை ஷோ' ஆப்பில் தெரியவந்துள்ளது. எனினும் இதுகுறித்து அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை . ஜானகி செளந்தர் இயக்கத்தில் அஜித், விஜய், இந்திரஜா, வடிவேலு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம், கடந்த 1995-ம் ஆண்டு வெளியானது. இளையாராஜா இசையில் உருவான இப்படம் இருவருக்கும் ஒரு நல்ல trade மார்க்கை ஏற்படுத்தியது.

வாரிசு, துணிவு படங்களின் ரிலீசால் எதிரும் புதிருமாக சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ள அஜித் - விஜய் ரசிகர்களுக்கு, தற்போது 'நாங்கள் எதிரிகள் அல்ல.. நண்பர்கள்தான்.. நீங்களும் சண்டை போட்டு கொள்ளாதீர்கள்.." என்பதை உணர்த்தும் விதமாக 'ராஜாவின் பார்வையிலே' ரீ-ரிலீஸ் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்கில் வாரிசு - துணிவு படங்களை வெளியிட 50 - 50 சதவீதம் திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories