சினிமா

“வா பதிலடிதான் தெரியும் டா..” - வெளியானது துணிவின் 'its time for GANGSTAA' பாடல்.. இணையத்தில் ட்ரெண்ட் !

“வா பதிலடிதான் தெரியும் டா..” - வெளியானது துணிவின் 'its time for GANGSTAA' பாடல்.. இணையத்தில் ட்ரெண்ட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம்தான் 'துணிவு'. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வைசாக் பாடலசரியாக உள்ளார்.

“வா பதிலடிதான் தெரியும் டா..” - வெளியானது துணிவின் 'its time for GANGSTAA' பாடல்.. இணையத்தில் ட்ரெண்ட் !

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதுகிறது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு பக்கம் துணிவு.. மறுபக்கம் வாரிசு.. என போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை இரண்டு படக்குழுவினரும் வாரிவாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் துணிவின் 'சில்லா சில்லா' பாடல் வெளியாகும் என துணிவு குழுவினர் அறிவித்த நிலையில், வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

“வா பதிலடிதான் தெரியும் டா..” - வெளியானது துணிவின் 'its time for GANGSTAA' பாடல்.. இணையத்தில் ட்ரெண்ட் !

பின்னர் கடந்த 9-ம் அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாரிசின் அடுத்த பாடலான 'தீ..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு பகல் நேரத்தில் துணிவு படத்தின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்பாடலை, பாடகர் வைசாக் எழுதி பாடியுள்ளார். பின்னணி குரலாக நடிகை மஞ்சு வாரியர், ஜிப்ரான் குரல் கொடுத்துள்ளனர். இது வெளியாகி இரண்டு நாளில் வாரிசின் மூன்றாம் பாடலான 'அம்மா..' பாடல் வெளியாகியது.

“வா பதிலடிதான் தெரியும் டா..” - வெளியானது துணிவின் 'its time for GANGSTAA' பாடல்.. இணையத்தில் ட்ரெண்ட் !

இந்த நிலையில் தற்போது துணிவின் மூன்றாம் பாடலான 'Gangstaa' பாடல் வரும் 25-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். மேலும் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் வைக்கும் விதமாக அந்த பாடலின் Lyric-ஐயும் (பாடல் வரிகள்) வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. சுமார் 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இப்பாடலை பாடகர் சபீர் சுல்தான் எழுதி பாடியுள்ளார்.

மேலும் இதில் "வா பதிலடிதான் தெரியும் டா.. உனக்கு சம்பவம் இருக்கு.." என்ற வரிகள் இடம்பெற்றிப்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வாரிசின் 'தீ..' பாடலில் 'இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.." என்ற வரிகள் இடம்பெற்றிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories