சினிமா

வாரிசு : வெளியூர்களில் இருந்து வேன், கார் அமைத்து வருகை.. 4 மணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் !

வாரிசு : வெளியூர்களில் இருந்து வேன், கார் அமைத்து வருகை.. 4 மணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். அண்மையில் இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.

வாரிசு : வெளியூர்களில் இருந்து வேன், கார் அமைத்து வருகை.. 4 மணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் !

இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு கும்பல் விமர்சித்து வந்தது.

இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு, படம் வெளியீட்டுக்கு ரசிகர்கள் பெரிதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரைஸ்கர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் விஜய் மற்றும் பாடகி மானசி குரலில் வெளியான 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.

வாரிசு : வெளியூர்களில் இருந்து வேன், கார் அமைத்து வருகை.. 4 மணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் !

தொடர்ந்து ஒரு வார காலமாக நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்த இப்பாடலை, அஜித்தின் துணிவு படத்தின் 'சில்லா சில்லா..' பாடல் ஓவர் டேக் செய்தது. அதன்பின் வெளியான வாரிசின் இரண்டாம் பாடலான சிம்பு பாடிய 'தீ..' பாடல் வெளியிலாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு துணிவின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

வாரிசு : வெளியூர்களில் இருந்து வேன், கார் அமைத்து வருகை.. 4 மணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் !

இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாரிசின் மூன்றாம் பாடலான 'Soul Of Varisu - அம்மா' பாடல் வெளியாகியது. பாடலாசிரியர் விவேக் எழுதி, பாடகி சித்ரா பாடியுள்ள இப்பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தற்போது 7.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்த நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் வரும் 24-ம் தேதி (இன்று) வாரிசின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என்று கடந்த 21-ம் தேதி படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

வாரிசு : வெளியூர்களில் இருந்து வேன், கார் அமைத்து வருகை.. 4 மணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் !
வாரிசு : வெளியூர்களில் இருந்து வேன், கார் அமைத்து வருகை.. 4 மணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் !

இதனை காண ரசிகர்கள் மூலை முடுக்கில் இருந்தும் படையெடுத்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்த விழாவிற்கு காலையில் இருந்தே ரசிகர்கள் கால் கடுக்க காத்துக்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories