சினிமா

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் ‘மாயி’ சுந்தர் உயிரிழப்பு.. திரையுலகத்தினர் இரங்கல்!

உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நடிகர் மாயி சுந்தர் பரிதாபமாக உயிரழந்தார். அவரது திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் ‘மாயி’ சுந்தர் உயிரிழப்பு.. திரையுலகத்தினர்  இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்தை மாவட்டம் மன்னர்குடியைச் சேர்ந்தவர் மாயி சுந்தர். சென்னைக்கு படங்களில் நடக்க வந்த மாயி சுந்தர் பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து வந்துள்ளார். மேலும் அறிமுகமாக நடிகராக சரத்குமார் நடித்த மாயி படத்தில் தான். அதனால் தான் அவரை மாயி சுந்தர் என்று அழைக்கின்றனர்.

துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், சமீபத்தில் வந்த கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் மாயி சுந்தர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, நடிகர் விஷ்ணு விஷால் படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் காமெடி கதாபத்திரங்களை ஏற்று நடித்து வந்த சுந்தருக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மஞ்சள்காமாலை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் 50வயதாகும் மாயி சுந்தருக்கு மஞ்சல்காமாலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி தீவிர சிகிச்சையில் இருந்துவந்தார். இதனிடையே அதிகாலை மாயி சுந்தர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories