சினிமா

TikTok சூர்யாவை அடித்த விவகாரம்.. சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் கைது! - முழு விபரம் படிக்க..

டிக்டாக் பிரபலம் சூர்யாதேவியை அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

TikTok சூர்யாவை அடித்த விவகாரம்..  சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் கைது! - முழு விபரம் படிக்க..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டி.வி மூலம் தமிழில் பிரபலமடைந்தவர் நாஞ்சில் விஜயன். இவர் தனக்கென தனியாக Youtube சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்காக டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் வனிதாவை பற்றி அவதூறாக பேசினார்.

TikTok சூர்யாவை அடித்த விவகாரம்..  சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் கைது! - முழு விபரம் படிக்க..

இந்த மோதல் தொடர்ந்து நாஞ்சில் விஜயன் பக்கம் திரும்பியது. அப்போது வனிதா, சூர்யாதேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர் நேரடியாக தங்களை ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் கடுமையாக தாக்கிக்கொண்டனர். அந்த சமயத்தில் சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும், அவர் பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும் நாஞ்சில் விஜயன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கியதாகவும் நாஞ்சில் விஜயன் சூர்யதேவி மீது புகார் தெரிவித்தார்.

TikTok சூர்யாவை அடித்த விவகாரம்..  சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் கைது! - முழு விபரம் படிக்க..

இதைத்தொடர்ந்து தன்னை பற்றி அவதூறாக பேசியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சூர்யாதேவி தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்பட்டது. மேலும் தன் புகைப்படங்களை நாஞ்சில் விஜயன் வெளியிட்டதாகவும் சூர்யாதேவி புகார் அளித்தார். சூர்யாதேவி அளித்த புகார் வழக்கு இது குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக நாஞ்சில் விஜயனுக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

TikTok சூர்யாவை அடித்த விவகாரம்..  சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் கைது! - முழு விபரம் படிக்க..

ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் ஆஜராகாமல் இருந்து வந்ததால் வளசரவாக்கம் காவல்துறையினர் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories