சினிமா

ரத்தசாட்சி : வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்த நடை போட்ட அப்பு - பாலன் யார் தெரியுமா?

உழைக்கும் மக்களுக்காக போராடக்கூடிய அப்பு, பயங்கரவாதி என்றும், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மனிதர் என்றும் காவல்துறையால் முத்திரை குத்தப்பட்டு, போலிஸ் கையில் அப்பு சிக்குவாரா இல்லையா ? என்பதே கதையாகும்.

ரத்தசாட்சி : வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்த நடை போட்ட அப்பு - பாலன் யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் 'ரத்தசாட்சி'. அறிமுக இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கிய இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் கடந்த 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. உண்மையாக வாழ்ந்த கம்யூனிஸ்டுகளான அப்பு மற்றும் பாலன் ஆகியோரை மையமாக கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் கைதிகள் எனும் சிறுகதையை எழுதினார். அதைத்தழுவி எடுக்கப்பட்ட இந்த ரத்த சாட்சி திரைப்படமும் அவர்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது.

ரத்தசாட்சி : வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்த நடை போட்ட அப்பு - பாலன் யார் தெரியுமா?

கம்யூனிஸ்டுகளின் எண்ணத்தை பிரதிபலிக்க கூடிய இப்படத்தில், முதலாளித்துவத்திற்கு எதிரான வசனங்கள், கதைக்களம் முழுமையாக அமைந்துள்ளது. வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்த நடை போட்ட அப்பு - பாலன் கதையையே இந்த படம் எடுத்துரைக்கிறது.

உழைக்கும் மக்களுக்காக போராடக்கூடிய அப்பு, பயங்கரவாதி என்றும், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மனிதர் என்றும் காவல்துறையால் முத்திரை குத்தப்படுகிறார். இதனால் அவரை போலிஸ் குழு தீவிரமாக தேடுகிறது. இறுதியில் போலிஸ் கையில் அப்பு சிக்குவாரா ? இல்லையா ? என்பதே இந்த கதையாகும்.

ரத்தசாட்சி : வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்த நடை போட்ட அப்பு - பாலன் யார் தெரியுமா?

சரி யார் இந்த அப்பு ?

கோவையை சேர்ந்த அற்புதசாமி என்ற பெயர் கொண்ட இவர், அப்பு என்று அழைக்கப்படுகிறார். சிறு வயதில் இருந்தே பொதுவுடைமை சித்தாந்தங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர், தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து தோழர் அப்புவாக மாறினார்.

பின்னர் கட்சி பிளவு பட்டபிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அங்கிருந்து தொழிற் சங்கங்கள், உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அந்த காலத்தில் பண்ணை அடிமை முறை செயல்பட்டு வந்தது. அதாவது, பண்ணையார்கள் தொழிலாளர்களை அடிமை போல் நடத்துவது, அவர்களுக்கு உரிய கூலியை கொடுக்காமல் சுரண்டுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

ரத்தசாட்சி : வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்த நடை போட்ட அப்பு - பாலன் யார் தெரியுமா?

இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் தர்மபுரி மற்றும் அதன் சுற்றியுள்ள அதிகமான இடங்களில் அரங்கேறியது. இதற்காக ஓயாமல் குரல் எழுப்பி வந்தார். மேலும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். அதோடு தமிழ்நாட்டில் நக்சல் பாரி இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களில் அப்புவும், பாலனும் முதன்மையானவர்கள் என்றே கூறலாம்.

ரத்தசாட்சி : வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக நிமிர்ந்த நடை போட்ட அப்பு - பாலன் யார் தெரியுமா?

உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தோழர் அப்புவை போலிஸ் கைது செய்வதில் தீவிர முனைப்பு காட்டினர். இருப்பினும் தான் தேடப்படும் ஒரு குற்றவாளி என்பதை அறிந்தே உழைக்கும் மக்களுக்காக தனது குரலை உயர்த்தினார்.

ஒரு கட்டத்தில் 1970-களில் அப்புவை போலிஸ் கைது செய்தனர். அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்பதே இப்பொது வரை யாரும் அறியாத ரகசியமாகவே உள்ளது. மேலும் தங்களிடம் இருந்து அவர் தப்பித்ததாகவும், தற்போது வரை அவர் தேடப்படும் ஒரு குற்றவாளி எனவும் போலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதனை இடதுசாரி அமைப்புகள் ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு, காவல்துறையினர் தான் அவரை கொன்று விட்டதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories