சினிமா

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்.. இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி !.. தலைவர்கள் இரங்கல்

ஒடிசாவில் பழம்பெரும் திரைப்பட நடிகை ஜரானா தாஸ் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு இந்திய திரையுலகமும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்.. இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி !.. தலைவர்கள் இரங்கல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒடிசாவில் பழம்பெரும் திரைப்பட நடிகையாக திகழ்பவர் ஜரானா தாஸ். இவர் தனது சிறு வயது முதல் ஒடியா மொழி திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் கட்டாக் வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும், துார்தர்ஷனில் துணை இயக்குநராகவும் பணிபுரிந்த இவர், பிறகு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்.. இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி !.. தலைவர்கள் இரங்கல்

தொடர்ந்து இவரது நடிப்பில் 90-களில் வெளியான வெளியான ஸ்ரீ ஜெகந்நாத், நாரி, அடின மேகா, அமடா பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. மேலும் ஒடிசா முன்னாள் முதல்வர் ஹரேகிருஷ்ண மஹ்தாப் குறித்த இவரது ஆவணப்படம், பலரது பாராட்டைப் பெற்றது

பழம்பெரும் நடிகையான இவருக்கு ஓடியா மொழியில் ரசிகர்களும் ஏராளம். இவரது நடிப்பிற்காக மாநில மற்றும் இந்திய அரசு சார்பில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் ஒடியா திரைத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதான 'ஜெயதேவ் புரஸ்கார்' விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்.. இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி !.. தலைவர்கள் இரங்கல்

தற்போது 77 வயதாகும் இவருக்கு சமீப காலமாக உடல் நலக்கோளாறு இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயது மூப்பின் காரணமாக ஒடிசாவின் கட்டாக்கில் வசித்து வந்த ஜரானா தாஸ் காலமானார். இவரது மறைவுக்கு ஒடிசா திரையுலகம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் இவரது இறப்புக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஒடிசா மாநில முதல்வர், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஒடிசா திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்.. இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி !.. தலைவர்கள் இரங்கல்

ஒடிசாவில் பழம்பெரும் திரைப்பட நடிகை ஜரானா தாஸ் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு இந்திய திரையுலகமும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories