சினிமா

விஜயுடன் நேரடியாக மோதும் பாலகிருஷ்ணா.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆடிப்போன தெலுங்கு சினிமா !

தெலுங்கில் விஜயின் வாரிசு படத்தின் வெளியீடு அன்றே, தெலுங்கு பிரபலம் பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜயுடன் நேரடியாக மோதும் பாலகிருஷ்ணா.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆடிப்போன தெலுங்கு சினிமா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலுங்கில் விஜயின் வாரிசு படத்தின் வெளியீடு அன்றே, தெலுங்கு பிரபலம் பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

விஜயுடன் நேரடியாக மோதும் பாலகிருஷ்ணா.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆடிப்போன தெலுங்கு சினிமா !

தெலுங்கு இயக்குநரான வம்சியால் இயக்கப்படும் இப்படம், தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜால் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழில் வாரிசு என்ற பெயரில் உருவாகும் இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'வரசுடு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படமும், அஜித் படமும் தமிழகத்தின் நேரடியாக களம் காணவுள்ளது. இதனால் இந்த பொங்கல் சரவெடி பொங்கலாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயுடன் நேரடியாக மோதும் பாலகிருஷ்ணா.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆடிப்போன தெலுங்கு சினிமா !

இப்படி இருக்கையில், தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணன் படம் விஐய் வாரிசு படத்துடன் நேரடியாக திரையரங்கில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதாவது தெலுங்கு மூத்த நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

விஜயுடன் நேரடியாக மோதும் பாலகிருஷ்ணா.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆடிப்போன தெலுங்கு சினிமா !

இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், வரலஷ்மி சரத்குமார், துனியா விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். பாலகிருஷ்ணாவுக்கு தெலுங்கு சினிமாவில் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது. முன்னதாக பண்டிகையின் போது விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கு மொழிகளில் திரையிடப்படக்கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

இதற்கு தமிழக திரை சங்கங்கள் சார்பில் வலுத்த எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த முடிவு பின்வாங்கப்பட்டது. இதனால் தற்போது தெலுங்கில் விஜயின் வாரிசு வெளியாவதில் சிக்கல் இல்லை. இருப்பினும் அங்கு பொங்கலின்போது பழகிருஷ்ணாவின் படம் நேரடியாக களமிறங்குகிறது.

விஜயுடன் நேரடியாக மோதும் பாலகிருஷ்ணா.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆடிப்போன தெலுங்கு சினிமா !

அதோடு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' படமும் ஜனவரியில் வெளியாகவுள்ளது. ஆனால் அதன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories