சினிமா

வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறை அதிர்ச்சி!

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் காலமானார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறை அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம் கடச்ச நேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி வைரவன். இவர் தமிழ்சினிமா உலகின் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் இவருடன் சேர்ந்து நடிகர் சூரி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிகர் சூரியுடன் சேர்ந்து பரோட்ட காமெடியில் நடித்தது அவரை திரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இதையடுத்து 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறை அதிர்ச்சி!

இதையடுத்து அவர் படத்தில் எதுவும் நடிக்காமல் இருந்துவந்தார். அண்மையில் முகத் தோற்றமே மாறிய நிலையில் தனது உடல் நிலை பாதிக்கப்பட்டது குறித்த இவரது வீடியோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

அந்த வீடியோவில்,"எனக்கு எல்லாமே இப்போது மனைவிதான். அவர் இல்லை என்றால் நான் இல்லை. உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பேன்" என நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறை அதிர்ச்சி!

இந்நிலையில், ஹரி வைரவன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இது குறித்து நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சக நடிகர்கள், ரசிகர்கள் என திரைத்துறையே ஹரி வைரவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories