சினிமா

தெலுங்கிலும் ஹிட்டடித்த 'LOVE TODAY'.. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடும் தெலுங்கு ரசிகர் !

LOVE TODAY திரைப்படம் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தெலுங்கு ரசிகர் ஒருவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை தூக்கி வைத்து கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தெலுங்கிலும் ஹிட்டடித்த 'LOVE TODAY'.. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடும் தெலுங்கு ரசிகர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், இவரே நடித்து வெளியான திரைப்படம் தான் 'LOVE TODAY'. காதநாயகனாக அறிமுகமான இந்த படத்தில் இவருடன் சேர்ந்து இவானா, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இன்றைய தலைமுறையின் காதல் பற்றி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், அவரது பாணியில் புது கண்ணோட்டத்துடன் இயக்கியுள்ளார். நகைச்சுவை, சென்டிமெண்டுடன் கதை அழகாக நகரும் இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்கில் வெளியானது. குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே வெளியான இப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நல்ல ரிவியூ கொடுத்ததால், அடுத்தடுத்து திரை ரசிகர்கள் இப்படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

தெலுங்கிலும் ஹிட்டடித்த 'LOVE TODAY'.. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடும் தெலுங்கு ரசிகர் !

குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டாக பார்த்து வருவதால், குறைந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த இப்படத்தை பல திரையரங்குகள் வாங்கி திரையிட்டனர். இதனால் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை கொடுத்த திரைப்படமாக இது மாறியுள்ளது.

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்று தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகி உள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகி உள்ள நிலையில், படத்துக்கு அங்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்று தெலுங்கின் முதல் காட்சியை ரசிகர்களோடு இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் சேர்ந்து பார்த்தநிலையில், படம் முடிந்து வெளியே வந்த ரசிகர் ஒருவர் அங்கு நடந்து வந்த பிரதீப் ரங்கநாதனை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டாடினார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories