சினிமா

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்.. இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி!

பிரபல பழம்பெரும் நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்..  இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் திரையுலகில் 1970 முதல் 1980கள் வரை 10 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர் தல்ஜீத் கவுர் கங்குரா. இவர் எந்த படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் வசூலை எடுத்துக் கொடுத்து விடும் அந்த அளவிற்கு ஒரு சக்சஸ் நடிகையாக இருந்தார்.

இவர் நடித்த தாஜ், கித்தா, புட் ஜட்டன் தே, ரூப் ஷாகினன் தா, இஷாக் நிமானா, லாஜோ, பட்வாரா, வைரீ ஜாட், படோலா, கீ பானு துனியா டா, சோஹ்னி மஹிவால், ஜக்காக டகு மற்றும் அனக் ஜட்டன் டீ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்..  இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி!

மேலும் தல்ஜீத் கவுர் கங்குரா சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிறுவனத்திலும் நடித்துள்ளார். இவர் ஹர்மிந்தர் சிங் தியோல் என்பவரைத் திருமணம் செய்தார். இதையடுத்து கணவர் ஹர்மிந்தர் சிங் தியோல் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். பிறகு இவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.

பிரபல பழம்பெரும் நடிகை திடீர் மரணம்..  இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி!

இந்நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த தல்ஜீத் கவுர் கங்குரா உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்குப் நேடிகர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சமூகவலைதளத்திலும் பஞ்சாப் திரை உலகம் மட்டுமல்லாது ஒட்டு மொத்த சினிமா உலகமே அவரது இழப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories