சினிமா

கெளதம் கார்த்திக்குடன் காதல்.. INSTA பக்கத்தில் இருந்து ஒட்டுமொத்த புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா !

கெளதம் கார்த்திக்குடன் உண்டான காதலை வெளிப்படுத்திய பிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து முந்தைய பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.

கெளதம் கார்த்திக்குடன் காதல்.. INSTA பக்கத்தில் இருந்து ஒட்டுமொத்த புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கெளதம் கார்த்திக்குடன் உண்டான காதலை வெளிப்படுத்திய பிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து முந்தைய பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். இவர் GVM இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார்.

கெளதம் கார்த்திக்குடன் காதல்.. INSTA பக்கத்தில் இருந்து ஒட்டுமொத்த புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா !

இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான 'தேவராட்டம்' திரைப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமாவும் ஜோடியாக நடித்த இந்த படம் வெளியான போதே, இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருமே தங்களது சமூக வலைதளங்கள் மூலம் தங்களது காதலை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து இருவரின் திருமணமும் எப்போது நடைபெறும் என்று எழுந்த ரசிகர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளிக்கவில்லை.

கெளதம் கார்த்திக்குடன் காதல்.. INSTA பக்கத்தில் இருந்து ஒட்டுமொத்த புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா !

எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மஞ்சிமா திடீரென அதிர்ச்சிகரமான செயல் ஒன்றை செய்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து முந்தைய பதிவுகள் ஒட்டுமொத்தமாக நீக்கியுள்ளார். மேலும் தற்போது மஞ்சிமா, கெளதமுடன் உள்ள காதலை வெளிப்படுத்திய பதிவுகளை மட்டுமே வைத்து விட்டு மற்ற அனைத்து பதிவுகளையும் முழுமையாக நீக்கியுள்ளார்.

கெளதம் கார்த்திக்குடன் காதல்.. INSTA பக்கத்தில் இருந்து ஒட்டுமொத்த புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா !

இவரது இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் குழப்பங்களையும் ஏற்படுத்திய நிலையில், இது குறித்து மஞ்சிமாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், "இன்ஸ்டாகிராம் மக்களுடன் இணைவதற்கு ஒரு சிறந்த இடம் என்பதை உணர்ந்தேன், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அழகை பற்றி கவலைப்பட வேண்டாம். அதனால் எனது பெரும்பாலான இன்ஸ்டாகிராம் படங்களை archive செய்துவிட்டேன்." என்றார்.

கெளதம் கார்த்திக்குடன் காதல்.. INSTA பக்கத்தில் இருந்து ஒட்டுமொத்த புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா !

எனினும் கெளதம் கார்த்திக்குடன் உண்டான காதலை வெளிப்படுத்திய பிறகு மஞ்சிமா இப்படி செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடிகை மஞ்சிமா மோகன் தற்போது 'October 31st Ladies Night' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளத்.

நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது சிம்புவின் 'பத்து தல' மற்றும் 'ஆகஸ்ட் 16, 1947' என்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது இருவரது திருமணமும் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories