சினிமா

தொடர்ந்து No 1-ல் "ரஞ்சிதமே.." - கலாய்க்கும் நெட்டிசன்கள்.. விளக்கம் கொடுத்த பாடலாசிரியர் விவேக் !

'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே..' பாடல் சர்ச்சைக்கு பாடலாசிரியர் விவேக் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தொடர்ந்து No 1-ல் "ரஞ்சிதமே.." - கலாய்க்கும் நெட்டிசன்கள்.. விளக்கம் கொடுத்த பாடலாசிரியர் விவேக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே..' பாடல் சர்ச்சைக்கு பாடலாசிரியர் விவேக் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். அண்மையில் இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.

தொடர்ந்து No 1-ல் "ரஞ்சிதமே.." - கலாய்க்கும் நெட்டிசன்கள்.. விளக்கம் கொடுத்த பாடலாசிரியர் விவேக் !

இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு கும்பல் விமர்சித்து வந்தது.

இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு, படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு' படத்துடன் போட்டியிடும் என்று எதிர்பார்ப்பில் இந்த படம் இருக்கிறது.

தொடர்ந்து No 1-ல் "ரஞ்சிதமே.." - கலாய்க்கும் நெட்டிசன்கள்.. விளக்கம் கொடுத்த பாடலாசிரியர் விவேக் !

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடப்பெற்றுள்ள "ரஞ்சிதமே..ரஞ்சிதமே.." என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியுள்ளார். மேலும் இப்படத்தின் பாடலுக்கு இசைமைப்பாளர் தமன் இசையமைத்து, பாடலாசியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்த பாடல் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், பாடல் காப்பி அடிக்கப்பட்டதாக கிண்டல் கேலியும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த பாடலின் மெட்டு "மொச்சக்கொட்ட பல்லழகி.." என்ற பாடலை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலித்தும் வருகின்றனர்.அதோடு இந்த பாடலுக்கு நிறைய மீம்கள், வீடியோ மீம்கள் என பலவற்றை உருவாக்கி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தொடர்ந்து No 1-ல் "ரஞ்சிதமே.." - கலாய்க்கும் நெட்டிசன்கள்.. விளக்கம் கொடுத்த பாடலாசிரியர் விவேக் !

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்திற்கு பாடலாசிரியர் விவேக் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவரளித்த பேட்டி ஒன்றில், "நாட்டுப்புற பாடல்களில் இருந்து தமிழில் பல பாடல்கள் வந்துள்ளது. உதாரணமாக, "மக்கக் கலங்குதப்பா..", "என்னமோ பண்ணலாம்... டிஸ்கோவுக்குப் போகலாம்..", என நிறைய இருக்கிறது.

இந்த பாடல் முதலில் வரும்போதே 'மொச்சைக் கொட்ட பல்லழகி' பாடலை பாடுவது போல் ஒரு சீன் வந்த பிறகுதான்.'ரஞ்சிதமே..' பாடல் வரும். அந்தப் பாடலுக்கான கிரெடிட்டை படத்திலேயே கொடுத்திருக்கிறோம். ரசிகர்கள் அது போன்ற பாடலை இப்போதும் தேடி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்" என்றார்.

தொடர்ந்து No 1-ல் "ரஞ்சிதமே.." - கலாய்க்கும் நெட்டிசன்கள்.. விளக்கம் கொடுத்த பாடலாசிரியர் விவேக் !

இந்த பாடலுக்கு எதிர்மறை விமர்சனங்கள் பல இருந்தாலும் தொடர்ந்து 6 நாட்களாக உலகளவில் NO 1 ட்ரெண்டிங்கில் இடம்பெற்று பெரும் சாதனையை படைத்துள்ளது. மேலும் 42 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்த இந்த பாடல் ரசிகர் மத்தியில் வெகுவாக ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories