சினிமா

சன்னி லியோன் VS தர்ஷா குப்தா.. பொது மேடையில் ஆடை குறித்து பேசிய நடிகர் சதீஷ்.. அறிவுரை கூறிய இயக்குநர்!

சன்னி லியோன், தர்ஷா குப்தா ஆடைகளை ஒப்பிட்டு பொது மேடையில் பேசிய நடிகர் சதீஷுக்கு இயக்குநர் நவீன் பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்

சன்னி லியோன் VS தர்ஷா குப்தா.. பொது மேடையில் ஆடை குறித்து பேசிய நடிகர் சதீஷ்.. அறிவுரை கூறிய இயக்குநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சன்னி லியோன், தர்ஷா குப்தா ஆடைகளை ஒப்பிட்டு பொது மேடையில் பேசிய நடிகர் சதீஷுக்கு இயக்குநர் நவீன் பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்

தமிழில் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சதீஷ். மிர்ச்சி சிவாவின் 'தமிழ் படம்' என்ற படத்தில் பாண்டியனாக தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், மதராசபட்டினம், வாகை சூடவா, எதிர் நீச்சல், கத்தி, ஆம்பள, ரெமோ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனுக்கு காமெடி நண்பராக நடித்து பிரபலமானார்.

அண்மையில் வெளியான 'நாய் சேகர்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர், சன்னி லியோன் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்திலும் நடித்துள்ளார்.

சன்னி லியோன் VS தர்ஷா குப்தா.. பொது மேடையில் ஆடை குறித்து பேசிய நடிகர் சதீஷ்.. அறிவுரை கூறிய இயக்குநர்!

இந்த நிலையில் இந்த படத்திற்கான ஆடியோ லான்ச் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தாவின் ஆடைகளை ஒப்பிட்டு கிண்டலடிக்கும் விதமாக பேசினார். அப்போது நடிகர் சதீஷ் பேசுகையில், "நடிகை சன்னி லியோன் மும்பைல இருந்து நமக்காக தமிழ்நாட்டுக்கு வந்துருக்காங்க அவங்க எப்படி ட்ரெஸ் பன்னிருக்காங்க-னு பாத்தீங்க... கோயம்பத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா... சும்மா சொன்னேன்" என்று தர்ஷா குப்தா அணிந்து வந்த ஆடையை கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார்.

சன்னி லியோன் VS தர்ஷா குப்தா.. பொது மேடையில் ஆடை குறித்து பேசிய நடிகர் சதீஷ்.. அறிவுரை கூறிய இயக்குநர்!

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'மூடர் கூடம்' படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சதீஷுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சன்னி லியோன் VS தர்ஷா குப்தா.. பொது மேடையில் ஆடை குறித்து பேசிய நடிகர் சதீஷ்.. அறிவுரை கூறிய இயக்குநர்!

அதில், "சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சகோ சதீஷ் அவர்களே, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். #மாற்றமேகலாச்சாரம்" என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories