சினிமா

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தாநாளான இன்று, அவரது அடுத்தடுத்த படங்களின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தாநாளான இன்று, அவரது அடுத்தடுத்த படங்களின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

உலகநாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். தனது சிறு வயதில், தமிழ் திரையுலகில் நுழைந்த இவர், அப்போதே பிரபலமானவராக அறியப்பட்டார். பின் கதாநாயகனாக 'சப்பாணியாக' நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

அதன்பின் பல இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்த இவர், இயக்குநர் மனிதனம் இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான 'நாயகன்' படத்தில் ஹீரோவும், இவரே, வில்லனுக்கு இவரே என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு இருந்தது. மும்பை கேங்க்ஸ்டராக நடித்திருந்த இவர், ரசிகர்கள் மனதை பெரிதும் கொள்ளைகொண்டார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், அவ்வை ஷண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா MBBS உள்ளிட்ட முழு காமெடி படங்களிலும் நடித்து குடும்பங்கள் மனதையும் கவர்ந்தார். இப்படி 1960-ல் நடிக்க தொடங்கி தற்போது வரை தமிழ் திரையுலகில் நீங்கா இடத்தை அதுவும் முன்னணி இடத்தை தக்கவைத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

மேலும் இவர் விருமாண்டி, ஹே ராம், விஸ்வரூபம் என சில படங்களையும் இயக்கியுள்ளார். இவரது நடிப்பிற்கு பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். ரசிகர்கள் இவரை 'உலக நாயகன்' என்று அன்போடு அழைக்கின்றனர். நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை ஆசிரியராக, பின்னணி பாடகராக பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ள இவர், தற்போது (இன்று) தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படம் பெரிய அளவு ஹிட் கொடுத்தது. இளையராஜா இசையில் வெளியான இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிதளவு வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி 35 ஆண்டுகளை கடந்த பின்னரும் கூட தமிழ் ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

இந்த படம் பெரிதளவு ஹிட் கொடுத்திருந்தாலும் அதற்கு பின்னர், கமல் - மணிரத்னம் கூட்டணி இணையவில்லை. இந்த நிலையில் தற்போது கமலின் 234-வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்கவிருக்கும் இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. கமலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

அதோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றிபெற்ற 'விக்ரம்' படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கவுள்ளனர். மேலும் 1996-ம் ஆண்டு கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன்' படம் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது மீண்டும் இவர்கள் இருவரது கூட்டணியிலும் அதன் இரண்டாம் பாகம் 'இந்தியன் 2' படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

மேல் குறிப்பிட்ட 3 இயக்குநர்களுடன் இரண்டாம் முறை கூட்டணி சேரும் கமல், முதல் முறை விஸ்வரூபம் படத்தின் எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். (மகேஷ் நாராயணன் தான் கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் 1 &2 ஆகிய படங்களுக்கு எடிட்டர் ). மேலும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் எச்.வினோத் கூட்டணியிலும் முதல் முறை நடிக்கவுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக கமலுடன் கூட்டணி சேரும் இயக்குநர்கள்.. யார் யார் தெரியுமா ?

கமலின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 6 புதிய படங்களின் அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories