சினிமா

ஈபிள் டவர் முன்பு Propose செய்த தொழிலதிபர்.. ஹன்சிகாவின் திருமணம் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல நடிகை ஹன்சிகாவுக்கு பழமையான அரண்மனையில் வைத்து விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அதனை அதிகாரபூர்வமாக அவரே தெரிவித்துள்ளார்

ஈபிள் டவர் முன்பு Propose செய்த தொழிலதிபர்.. ஹன்சிகாவின் திருமணம் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா. அதன்பிறகு, மாப்பிள்ளை, வேலாயுதம், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தாலும், தெலுங்கு திரையிலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களும் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. இதனிடையே சுந்தர் சி-யின் அரண்மனை படத்தின் மூலம் பேயாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதோடு இவரது நடிப்பில் அண்மையில் 'மகா' என்ற படம் வெளியாகியது.

ஈபிள் டவர் முன்பு Propose செய்த தொழிலதிபர்.. ஹன்சிகாவின் திருமணம் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

முன்னதாக சிம்புவுடன் காதல் உறவில் இருந்த ஹன்சிகா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதையடுத்து ஹன்சிகாவின் திருமணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. சமீபத்தில் கூட ஹன்சிகாவின் சகோதரர் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

குடும்பத்தாரின் உறுதுணையால் தனது நடிப்பில் மும்முரம் காட்டி வந்த நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது 31 வயதாகும் நிலையில், அவரது திருமண செய்திக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

ஈபிள் டவர் முன்பு Propose செய்த தொழிலதிபர்.. ஹன்சிகாவின் திருமணம் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

அதாவது நடிகை ஹன்சிகாவுக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் இந்தாண்டு டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதுவும் அந்த திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஹன்சிகா தரப்பில் இருந்து இதற்கு எந்த மறுப்பும் விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.

ஈபிள் டவர் முன்பு Propose செய்த தொழிலதிபர்.. ஹன்சிகாவின் திருமணம் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்த நிலையில் இவரும், இவரது வருங்கால கணவரும் தற்போது பாரிஸ்-ல் உள்ள ஈபிள் டவர் அருகே ப்ரீ-வெட்டிங் ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதவாது ஹன்சிகாவும், அவரது நீண்டகால நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதூரியாவும், திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதனை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை ஹன்சிகா அறிவித்துள்ளார். விரைவில் திருமணமாகப்போகும் ஹன்சிகாவுக்கு திரைபிரபலன்கள் ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகை ஹன்சிகா தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் என கையில் மொத்தம் 6 படங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories