சினிமா

உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' டீசர் வெளியானது ! - ரசிகர்கள் வரவேற்பு !

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' டீசர் வெளியானது ! - ரசிகர்கள் வரவேற்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு பக்கம் பொது சேவை, மறுபக்கம் சினிமா என்று தன்னை எப்போதும் பிசியாக வைத்திருக்கும் உதயநிதி, அடுத்த படத்தை 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரிக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' டீசர் வெளியானது ! - ரசிகர்கள் வரவேற்பு !

'மாமன்னன்' திரைப்படம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக உதயநிதி நடிப்பில் தடம் பட இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கலகத் தலைவன்' படம் உருவாகிறது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' டீசர் வெளியானது ! - ரசிகர்கள் வரவேற்பு !

இவர்களுடன் கலையரசன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. மேலும் இதற்கு கோரெல்லி இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் 'கலகத் தலைவன்' டீசர் வெளியானது ! - ரசிகர்கள் வரவேற்பு !

டீசர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories