சினிமா

'என்னை பழி வாங்கிட்டேல்லா, இப்ப சந்தோஷமா'-நடிகையை தாக்கிய வழக்கில் சிறைக்கு செல்லுமுன் கதறிய நடிகர் அரணவ்

காதல் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான திவ்யாவை, சின்னத்திரை நடிகர் அரணவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் வழக்கில் அரணவை காவல்துறையினர் கைது செய்தனர்.

'என்னை பழி வாங்கிட்டேல்லா, இப்ப சந்தோஷமா'-நடிகையை தாக்கிய வழக்கில் சிறைக்கு செல்லுமுன் கதறிய நடிகர் அரணவ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சின்னத்திரை நடிகர் அரணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக நடிகையும், அவரது காதல் மனைவியுமான திவ்யா போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நடிகர் அரணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை காவல்துறை அழைப்பு விடுத்தும் அதற்கு நடிகர் அரணவ் இணங்கவில்லை. எனவே அவருக்கு பதிவு தபால் மற்றும் செல்போன் மூலம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட அரணவ், விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஜராகவில்லை.

'என்னை பழி வாங்கிட்டேல்லா, இப்ப சந்தோஷமா'-நடிகையை தாக்கிய வழக்கில் சிறைக்கு செல்லுமுன் கதறிய நடிகர் அரணவ்

மேலும் அவரது வழக்கறிஞர் போரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று 'அரணவிற்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன் காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத காவல்துறை, அவர் நேற்று ஆஜராகவில்லை என்று கைது செய்தனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "புகார் குறித்து நடிகர் அரணவை பலமுறை நேரில் ஆஜராக கூறியும், அவர் மதிக்கவில்லை. எனவே தற்போது ஆஜாராவார் என்று எண்ணிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

'என்னை பழி வாங்கிட்டேல்லா, இப்ப சந்தோஷமா'-நடிகையை தாக்கிய வழக்கில் சிறைக்கு செல்லுமுன் கதறிய நடிகர் அரணவ்

ஆனால் அரணவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான சான்றுகள் ஏதும் தராததால் சந்தேகம் எழுந்தது. மேலும் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்கும் நாட்களுக்கு இடையில் அவர் முன் ஜாமீன் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

பின்னர் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. மேலும் இதையடுத்து அவர் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போரூர் தனிப்படை காவல்துறை உதவியோடு ,பூந்தமல்லியை அடுத்துள்ள நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பிலிருந்த அரணவை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

'என்னை பழி வாங்கிட்டேல்லா, இப்ப சந்தோஷமா'-நடிகையை தாக்கிய வழக்கில் சிறைக்கு செல்லுமுன் கதறிய நடிகர் அரணவ்

தொடர்ந்து கைது செய்யப்பட்ட அரணவை பூந்தமல்லி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு, பின்னர் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பரம்வீர் முன்னர் ஆஜர் படுத்தினர். அப்போது நடிகர் அரணவிற்கு வரும் 28ம் தேதி வரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறைக்கு அழைத்துச் செல்லும் முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அரணவ், "நான் எந்த தப்பும் செய்யவில்லை; உண்மை ஒருநாள் நிரூபிக்கப்படும். என்னைப் பழி வாங்க வேண்டும் என்று . நீ நினச்ச மாதிரியே செய்து விட்டாய். இப்போது சந்தோஷமா?" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories