சினிமா

முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கிய சிம்பு.. ரஜினி பட நடிகையின் ஹிந்தி படத்தின் மூலம் வேற லெவல் Entry!

ரஜினியின் 'காலா' படத்தில் நடித்த நடிகை ஹூமா குரேஷியின் பாலிவுட் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளது வெளியாகி 2 மணி நேரத்திலே 1 லட்சத்திற்கு மேலான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கிய சிம்பு.. ரஜினி பட நடிகையின் ஹிந்தி படத்தின் மூலம் வேற லெவல் Entry!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மைகொண்டவராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

இவரது குரலில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. மேலும் தெலுங்கு படத்தில் வெளியான 'daimond girl' பாடலுக்காக விருதும் வாங்கியுள்ளார். சமீபத்தில் கூட வெளியான 'வாரியர்' திரைப்படத்தில் வெளியான 'புல்லட்' பாடல் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி செம்ம ஹிட் அடித்தது.

முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கிய சிம்பு.. ரஜினி பட நடிகையின் ஹிந்தி படத்தின் மூலம் வேற லெவல் Entry!

இதையடுத்து வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், அந்த படமும் ஹிட் அடித்தன. சிம்புவின் கம்பேக் மூலம் தொடர்ந்து பாடல், படங்கள் என ஹிட் அடித்துக்கொண்டே வருகிறது.

முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கிய சிம்பு.. ரஜினி பட நடிகையின் ஹிந்தி படத்தின் மூலம் வேற லெவல் Entry!

இந்த நிலையில் ரஜினியுடன் 'காலா' படத்திலும், அஜித்துடன் 'வலிமை' படத்திலும் நடித்த பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி மற்றும் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்‌ஷி சின்ஹா, சிம்புவின் நண்பரான நடிகர் மஹத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் XL' படத்தில் இடம்பெற்றுள்ள #TaaliTaali என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.

முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கிய சிம்பு.. ரஜினி பட நடிகையின் ஹிந்தி படத்தின் மூலம் வேற லெவல் Entry!

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சிம்பு, "ஹிந்தியில் எனது முதல் பாடல் இதோ.., பாலிவுட்டில் பாடகராக நான் அறிமுகமாகியுள்ளேன். இது எனது நண்பன் மகத்துக்காக.. உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்.. #TaaliTaali பாடலுடன் டபுள்எக்ஸ்எல் நண்பர்களின் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories