சினிமா

90S KIDS-களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மர்ம தேசம், ஜீ பூம்பா தொடரின் நடிகர் தற்கொலை!

மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட நாடகங்களில் நடித்த நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

90S KIDS-களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மர்ம தேசம், ஜீ பூம்பா தொடரின் நடிகர் தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1990ம் ஆண்டு தொலைக்காட்சிகளில் வெளியான ஜீ பூம்பா, மர்ம தேச தொடர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போதும் 90ஸ் கிட்ஸ்களை பீதியடையவைத்த தொடர்களின் பட்டியலில் எப்போதும் ஜீ பூம்பா, மர்ம தேச தொடர்களுக்கு இடம் உண்டு.

இந்த இரண்டு தொடர்களிலும் நாயகான நடித்தவர் லோகேஷ். மேலும் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் நடித்துள்ளார். சிறுவனாக இருந்த போது நிறைய படத்தில் நடித்திருந்தாலும் இளைஞராக வளர்ந்த பிறகு லோகேஷ் ராஜேந்திரன் பெரியபட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

90S KIDS-களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மர்ம தேசம், ஜீ பூம்பா தொடரின் நடிகர் தற்கொலை!

இதனால், சினிமா துறையில் சிறிய சிறிய பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் 6 அத்தியாயம் என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

காஞ்சிபுரம் மாடம்பாக்கத்தில் தனது தாய் தந்தையுடன் லோகேஷ் வசித்து வந்தார். இவருக்குக் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அண்மையில் அவரது மனைவி விவாகரத்து கேட்டு லோகேஷுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் மனமுடைந்த லோகேஷ் மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார்.

90S KIDS-களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மர்ம தேசம், ஜீ பூம்பா தொடரின் நடிகர் தற்கொலை!

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு வந்த லோகேஷ் விஷம் குடித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். பிறகு பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு வந்தபோலிஸார்அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலிஸார் சேர்த்தனர். 2 நாள் சிகிச்சையில் இருந்த லோகேஷ் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories