சினிமா

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

"புகழின் உச்சிக்கு செல்லும் ஒருவர் அதே வேகத்தில் பாதாளத்தில் விழும் சோக வாழ்க்கை.." - மைக்கெல் ஜாக்சனின் பலரும் அறியா பக்கம்

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாப் இசையை உலகம் முழுக்கக் கொண்டு சென்று சேர்த்த பெருமை மைக்கெல் ஜாக்சனையே சாரும். அவருக்கு முன் எல்விஸ் ப்ரெஸ்லி போன்ற பல பாப் இசைக் கலைஞர்கள் இருந்தபோதும் மைக்கெல் ஜாக்சன்தான் வெகுஜன மக்களின் கொண்டாட்ட நாயகனாக இருந்தார். நடனமும் இசையும் அவரது பாணியும் வெகுஜன மக்களை வெகுவாக ஈர்த்தன.

மைக்கெலுக்கு அற்புதமான குழந்தைப்பிராயம் வாய்க்கவில்லை. பல நாட்கள் தந்தையிடம் பெல்ட்டால் அடி வாங்கியிருக்கிறார். அவர்களின் குடும்பத்தில் குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கு பெல்ட் மட்டுமே வழியாக இருந்திருக்கிறது. தன்னை எப்போதும் ‘குண்டு மூக்கு’ என அப்பா நக்கலடித்ததாக மைக்கெல் ஜாக்சன் நினைவு கூருகிறார். தன்னுடைய இளமைக்காலம் தனிமையிலேயே கழிந்ததாக சொல்கிறார் மைக்கெல் ஜாக்சன்.

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

ஆறாம் வயதில் மிக முக்கியமான மாற்றத்துக்கு மைக்கெல் ஜாக்சனின் வாழ்க்கை உள்ளானது. அப்பா உருவாக்கிய இசைக்குழுவில் முதன்முதலாக மைக்கெல் ஜாக்சன் பாடத் தொடங்கினார். என்ன ஏதேன்று அறியாத காலத்திலேயே கைதட்டல்களையும் புகழையும் ருசிக்கத் தொடங்கி விட்டார் மைக்கெல்.

மைக்கெலின் இசை வளர்ச்சியினூடாக அவர் மனம் கொண்ட தனிமையும் அபரிமிதமான வசதியும் ஒன்று சேர்ந்து, தாராளமயம் உருவாக்கும் தனிமனிதவாதம் அவருக்குள் தலையெடுக்கத் தொடங்கியிருந்தது. உறவு மற்றும் பாலியல் சிக்கல்கள் மட்டுமே சமூகத்தின் பிரதான பிரச்சினைகளாக பார்க்கும் போக்கு அவருள் ஆதிக்கம் செலுத்தியது. அந்த ஆதிக்கத்துடன் ஆபத்தான சேர்க்கையாக அதிகாரமும் சேர்ந்தது.

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

1979ம் ஆண்டு ஒரு நடனப்பயிற்சியின் போது மைக்கெல் ஜாக்சனுடைய மூக்கு காயப்பட்டது. இளமை பிராயத்திலிருந்து அப்பாவால் மனரீதியாக ஊனப்படுத்தப்பட்ட அதே பகுதி. ‘குண்டு மூக்கு’ என சூட்டப்பட்டவரின் மூக்கு உடைபட்டிருந்தது. சுவாசத்தில் சிக்கல் ஏற்பட்டு அவருடைய இசை வாழ்க்கை பாதிப்படையத் தொடங்கியது. மருத்துவர்களை நாடத் தொடங்கினார். அறுவை சிகிச்சை முதன்முதலாக மைக்கெல் ஜாக்சனின் வாழ்க்கைக்குள் வந்தது.

1980களில் மைக்கெல் ஜாக்சனின் தோல் வெளுக்க துவங்கியது. வெண்புள்ளி நோய் மைக்கெல் ஜாக்சனை தாக்கியது. ஊடகங்களுக்கு அவருடைய தோலின் நிறம் முக்கியமான செய்தியாக மாறியது. வெண்புள்ளி நோயை மறைப்பதற்கென மைக்கெல் ஜாக்சன் தோலை ப்ளீச் செய்யத் தொடங்கினார். இன்னும் தோலின் நிறம் மாறியது. பலவித அறுவை சிகிச்சைகளை செய்தார். உடலையும் தோலின் நிறத்தையும் பாதுகாப்பதே மைக்க்கெல் ஜாக்சனுக்கு மிகப்பெரும் விஷயமாக இருந்தது.

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

1984ம் ஆண்டு ஒரு குளிர்பான விளம்பரத்தில் மைக்கெல் ஜாக்சன் நடித்தார். விளம்பரத்துக்கான படப்பிடிப்பின்போது தீ விபத்து நேர்ந்தது. பற்றிய தீ அரங்கை மட்டுமல்லாமல் மைக்கெல் ஜாக்சனின் முடியையும் உடலையும் சேர்த்து பற்றியது. நெருப்பை அணைத்து மைக்கெல் ஜாக்சன் உடனடியாக காப்பாற்றப்பட்டார். ஆனாலும் அவரின் தலையின் பிற்பகுதியிலும் உடலின் பல இடங்களிலும் தீக்காயங்கள் இருந்தன. முடியை முற்றிலுமாக இழந்திருந்தார். தீ பற்றிய காயங்களில் ப்ளாஸ்டிக் சர்ஜரியின் துணையோடு புதுத்தோல் போர்த்தப்பட்டது.

ஆயுளை நீட்டிக்கவும் உடல் வயதடையாமல் இருக்கவும் மைக்கெல் ஜாக்சன் தன் வீட்டில் ஒரு ஆக்சிஜன் அறை வைத்திருந்தார் என்ற செய்தி உண்மையென அவரின் மேனேஜர் ஒப்புக் கொண்டார்.

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

மைக்கெல் ஜாக்சன் தனி நபராக எப்படிப்பட்டவர் என்பதை உலகம் புரிந்து கொள்ளத் தொடங்கியது. ஒரு நட்சத்திர ஆளுமையாக தன் உடல் மீதும் இளமை மீதும் கவனம் செலுத்துவது எவருக்கும் இயல்பே எனினும் அதற்கென ஆக்சிஜன் நிரப்பப்பட்ட அறையை பயன்படுத்துவதும் அதன் வழி ஆயுளை நீட்டிக்க முடியுமென அவர் நம்புவதும் எத்தனை பிற்போக்காக அவர் இருந்திருப்பாரென்பதையே வெளிப்படுத்துகிறது. மைக்கெல் ஜாக்சன் அடைந்திருந்த உயரம் சமூகத்தின் இயல்பான பகுத்தறிவில் இருந்தே அவரை எவ்வளவு தூரம் தள்ளி வைத்திருந்தது என்பதற்கு சாட்சியே அவர் பயன்படுத்திய ஆக்சிஜன் அறை.

1993ம் ஆண்டு. முதல் பாலியல் குற்றச்சாட்டை சந்தித்தார் மைக்கெல் ஜாக்சன். ஆகஸ்ட் 1993ம் ஆண்டில் ஜோர்டன் சேண்ட்லர் என்ற 13 வயது சிறுவனை தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினார் என குற்றச்சாட்டு எழுந்தது. காவல்துறையினர் மைக்கெல் ஜாக்சனின் வீட்டில் ரெய்டு நடத்தினர். உலகுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

போலீஸ் ரெய்டில் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் பலவற்றை மைக்கெல் ஜாக்சனின் வீட்டில் கைப்பற்றினர். அவற்றை மைக்கெல் ஜாக்சன் சட்டவிரோதமாக வைத்திருக்கவில்லை என்பதால் அது பிரச்சினை ஆக்கப்படவில்லை. ஆனால் அத்தகவல் செய்தியான போது மக்களுக்கு மைக்கெல் ஜாக்சன் என்கிற கலைஞனின் மனம் என்னவாக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

போலீஸ் ரெய்டில் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

2002ம் ஆண்டு மீண்டுமொரு குற்றச்சாட்டு எழுந்தது. 'Living with Michael Jackson' என்றொரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. மைக்கெல் ஜாக்சனின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் படம். அந்த படத்தின் சில இடங்களில் மைக்கெல் ஜாக்சன் இரவு படுக்கையை சிறுவர்களுடன் பகிர்வதாக காண்பிக்கப்பட்டிருந்தது.

வழக்கு தொடரப்பட்டது. ஏழு சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு மைக்கெல் ஜாக்சன் உட்படுத்தினார் என்பதும் ஒரு சிறுவனை மதுப்பழக்கத்துக்கு உட்படுத்தினார் என்பதும் மைக்கெல் ஜாக்சன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.

மைக்கெல் ஜாக்சன் அவருடைய புகழின் இறுதிக்கட்டத்துக்கு வந்திருந்தார். ஒருவழியாக வழக்கு முடிவுக்கு வந்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மைக்கெல் ஜாக்சன் மனதளவில் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

எல்லா கலைஞர்களையும் போலவே மைக்கெல் ஜாக்சனின் கலை வாழ்க்கையும் முடிவதற்கு முன்பே முடிந்திருந்தது. புகழின் உச்சத்துக்கு செல்லும் ஒருவர் அதே வேகத்தில் அவரது காலத்திலேயே பாதாளத்துக்கு விழும் சோகத்தையும் வாழ்க்கை எப்போதும் எல்லா கலைஞர்களுக்கு கொடுத்தே வந்திருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம், உயரத்தை ஏற தொடங்கியதுமே அக்கலைஞர்கள் தங்களை சமூகத்திலிருந்து துண்டித்துக் கொண்டு கனவு வாழ்க்கையின் ஒய்யாரத்தில் மிதந்து கொண்டிருப்பதே.

2009, ஜூன் 25 அன்று மைக்கெல் ஜாக்சன் இறந்தார்.

“வெண்புள்ளி நோய், தீ காயம், பாலியல் குற்றச்சாட்டு..” - பலருக்கும் தெரியாத மைக்கெல் ஜாக்சனின் மறுபக்கம் !

மனநல வளர்ச்சியில்லாமல் பொருளாதார வளர்ச்சியை மட்டும் கொள்ளும் ஒருவன், கடவுளின் நிலையை மக்கள் மத்தியில் அடைகையில், அவன் பெறும் அதிகாரம் எத்தனை குரூரமான அருவருப்பான காரியங்களை செய்யும் என புரிந்துகொள்வதற்கு மைக்கெல் ஜாக்சனின் வாழ்க்கையே நமக்கு ஆவணம்.

இன்று மைக்கெல் ஜாக்சனின் பிறந்தநாள்.

banner

Related Stories

Related Stories